செம்பருத்தி மாஸ்க்
செம்பருத்தி தலைமுடிக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் ஏராளமான பயன்களை அள்ளிக் கொடுக்கக்கூடியது.
வெளிப்புற சருமத்திற்கு
சிறப்பான சில செம்பருத்தி மாஸ்கள் , செம்பருத்தி இதழ்கள், ரோஜா இதழ்களுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் முல்தானிமட்டி, தயிர் கலந்து பத்து முதல் 15 நிமிடங்கள் பூசி பின்னர் கழுவவும்.
அதிக எண்ணெய் வலியும் சருமம், சருமத்திட்டுக்கள் சேதங்கள் சரியாகும்
செம்பருத்திப்பொடி இரண்டு டேபிள்ஸ்பூன், பால் ஒரு டேபிள் ஸ்பூன், தேன் ஒரு டேபிள் ஸ்பூன் மூன்றையும் கலந்து பத்து முதல் 20 நிமிடங்கள் வரை முகத்தில் தடவி கழுவலாம்.
இதனால் முகச்சுருக்கங்கள் வறட்சி நீங்கி புது பொலிவு கிடைக்கும்.
செம்பருத்தி பொடி ரெண்டு டேபிள் ஸ்பூன், தயிர் 2 டேபிள் ஸ்பூன் கலந்து முகத்தில் தடவி பத்து முதல் 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம் .
சர்வ துவாரங்களில் உள்ள அழுக்குகள் கிருமிகள் நீங்கி சருமம் பொலிவு பெறும்.
மேலும் பளிச்சு நிறமும் கிடைக்கும்.
செம்பருத்திப்பொடி இரண்டு டேபிள்ஸ்பூன் ,ரோஸ் வாட்டர் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து திக்கான பெஸ்ட்டாக கலந்து முகத்தில் தடவலாம்.
அதிக வெயில் அலைச்சல் காரணமாக உண்டாகும் சரும சோர்வு , கருமை நீங்கி முகம் பளிச்சன மாறும் .
அரை டீஸ்பூன் செம்பருத்தி பவுடர் , அரை டீஸ்பூன் வேப்பிலை , உடன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து முகத்தில் தடவி காய்ந்தவுடன் கழுவலாம் சரும கருத்திட்டுகள் நீங்கும்.
எண்ணெய் பசை குறைந்து புத்துணர்ச்சியாக காணப்படும்.
வாரத்திற்கு ஒருமுறை இந்த மாஸ்க் பயன்படுத்தினால் போதும்.