லேகியங்களும் பயன்களும்

லேகியங்களும் பயன்களும்
வெண்பூசணி லேகியம் 
வயிற்றுப்புண், உடல் உஷ்ணம் இவற்றை நீக்கி இளைத்த உடல்தேற்றவும், உடல் பலவீனம் நீங்கிடவும், வெள்ளை பூசணிக்காயை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் இம்மருந்து ஒரு உடல் தேற்றி மருந்தாகும்.

 கரிசாலை லேகியம் 
ரத்தசோகை, கண் பார்வை குறைவு, வயிற்றுக்கு கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள், மஞ்சள் காமாலை நோயிலிருந்து உடல் தேற்றி மருந்தாக பயன்படும்.

 பசியை அதிகரித்து ஊட்டங்கள் முழுமையாக உட்கொள்ளப்படும்
 கரிசாலை உதவுகிறது.

 குடல் கிருமிகளை வெளியேற்றவும், சுவாச பிரச்சனைகளுக்கான உணவாக கரிசாலை பயன்படுத்தலாம் .

வில்வாதி லேகியம் 
பித்தம், வாந்தி, மயக்கம் இவற்றை நீக்கக்கூடியது.

 அஜீரணம், வயிற்று உப்பூசம் இரண்டுக்கும் வில்லவ பட்டையை கொண்டு செய்யும் வில்வாதி லேகியம் நல்ல மருந்து.

 சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

 வில்வம் ஓர் அற்புத மூலிகை.

 திப்பிலி லேகியம்
 ரத்தத்தில் கலந்துள்ள கழிவுகளை நீக்கி ரத்த சுத்தியாக செயல்படும்.

 சுவாசம் , வயிற்று வலி,  வயிறு ஜீரணம் இவைகளை குணப்படுத்தும் .

முகத்தில் உண்டாகும் கருத்த மச்சம், சிவப்பு மச்சம் ,கரும்புள்ளிகள் போன்றவை குணமாகும் .

அமிர்த சஞ்சீவி லேகியம் 
இரண்டு முதல் ஐந்து கிராம் வரை தினம் இரு வேளை சாப்பிட்டு வர சர்க்கரை நோய் ,அஸ்திகரம், சீதபேதி, வாயு, சோகை, காமாலை முதலிய நோய்கள் தீரும்.

 நரம்புத் தளர்ச்சியை நீக்கும்.

 இளைத்தவுடல் தேரவும், உடல் பலவீனம் ,சோர்வு இவை அகற்றும் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளையும் பலப்படுத்தவும் கூடியது.

 நரசிம்ம லேகியம் 
நாடி நரம்புகளை பலப்படுத்தி ,உடலின் சீர்குலைந்த தாதுகளை கூட்டி உடலை தேற்றக் கூடிய ஒப்பற்ற மருந்து.

 மூலிகைகளின் வேர்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

 தாது புஷ்டி லேகியம் 
ஆண்மை குறைவு நீங்கும். 

நரம்பு தளர்ச்சியை நீக்கி நரம்புகளுக்கு ஊக்கமும் மற்றும் நரம்புகளையும் உருக்கேற்றமும் உதவுகிறது.

 மேலும் உடல் மிகவும் தளர்வுற்று பாதித்த நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலுக்கு நல்ல வலிமையை தரும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை