வில்லங்கம் வீராச்சாமி
வெச்சபேரு வீராச்சாமி
ஆனா அவரை நண்பர்கள்
வில்லங்கம்
வீராச்சாமீன்னு கூப்பிடுவாங்க.
போனமாசம்
துணிக்கடைக்குள்ள போன
பொண்டாட்டி
பொழுதாகியும் கானோம் னு
கடைல
வெடிகுண்டு இருக்கிறதா
புரளியக் கெளப்பிவிட்டு
பொண்டாட்டிய மீட்டு வந்தார்.
பையனுக்கு ஸ்கூல் பீஸ்
கட்ர தேதிய தள்ளிப்போடனும்
என்பதற்காக
பள்ளிக்கூடத்தில
வெடிகுண்டு வெடிக்கும் னு
ஒரு போனைப் போட்டு
அந்தப் பரபரப்பிலேயே
ஒரு வாரத்தைக் கடத்தீட்டார்.
மாமனாருக்கு
வைத்தியம் பார்த்த
ஆஸ்ப்பத்திரிப் பில்லைக்
கட்டாம
சாமார்த்தியமா
புரளிய கெளப்பி விட்டுட்டு
டிஜ்ஜார்ஜ் பன்னி
கூட்டியாந்துட்டார்,
இதெல்லாமே அவரோட
நெருங்கிய
நண்பர்களைத் தவிர
யாருக்கும் தெரியாது.
லைட்டா மிஸ்ஸஸ்சுக்கு
தெரிஞ்சும்
தெரியாத மாதிரி இருந்தது.
ஏதுங்க பணம்,,?
எப்படிச் சமாளிச்சீங்கன்னு
கேள்வி கேட்டா...
ரியல் எஸ்ட்டேட் பிசினஸ்ல
லாபம் கொட்டறதாச்
சொல்லியே சமாளிப்பார்.
இன்னைக்கு
கையில பணமில்லேன்னு
தெரிஞ்சும்
சூப்பர் மார்க்கெட்ல
தைரியமா
பர்ஜ்ஜேஸ் பன்னீட்டு
இன்கம் டேக்ஸ்
ரைடு வர்ராங்கன்னு
ஒனருக்குப்
போனப் போட்டுட்டு...
சாமார்த்தியமா
ஆட்டோப்புடுச்சு
வீட்டுக்கு வந்துட்டார்.
வீட்டுல ஒரே கூட்டம்
விசாரிச்சுப் பாத்தா
வெள்ளைக் கலர்
அம்பாசிட்டர்ல
யாரோ அஞ்சாறுபேரு வந்து
உன் பொண்டாட்டிய
கடத்தீட்டுப்
போய்ட்டாங்கன்னு
சொன்னாங்க,
உள்ளூர சந்தோசமா
இருந்தாலும்
ஒரே ஒரு பொண்டாட்டி...
அவளையும் விட்டுட்டு
என்ன பன்ரதுன்னு
அதே ஆட்டோவில
போலீஸ் ஸ்டேசனுக்கு ஓடினார்.
போலீஸ் ஸ்டேசன் பூராவும்
மெட்டல் டிடெக்ரோட
மோப்ப நாயும் சேர்ந்து
எதையோ
தேடிக்கிட்டு இருந்துச்சு.
புகார் கொடுக்கிற கண்டிசன்ல
போலீஸ் ஸ்டேசன் இல்லே...
பொண்டாட்டி தானே
போனாப்
போயிட்டுப் போரான்னு
கலர்க் கனவுகளோட
வீட்டுக்கு திரும்பி வந்தார்,,
கையில தொடப்பக் கட்டையோட
பூதம் மாதிரி
ஏதோ ஒன்னு தெரிஞ்சுது
மத்ததை
குடும்பஸ்த்தனா
இருக்கர உங்களுக்கு
நான் சொல்லியா தெரியனும்,!?