90's டா ....
ஓர் இளைஞன் தன் தந்தையை
பார்த்து கேட்டான் .....
⚘செல்போன்
⚘டி வி
⚘கம்ப்யூட்டர்
⚘இண்டர்னெட்
⚘ஏ சி
⚘வாஷிங் மெஷின்
⚘கேஸ் கனெக்ஷன்
⚘மிக்ஸி
இவை எல்லாம் இல்லாமல் உங்களால் எப்படி வாழ முடிந்தது?
தந்தை பதில் கூறினார்
⚘மரியாதை
⚘மானம்
⚘மதிப்பு
⚘வெட்கம்
⚘உண்மை
⚘நற்குணம்
⚘நன்னடத்தை
⚘நேர்மை
⚘தெய்வ பக்தி
⚘தர்மம்
⚘கற்பு
இவை அனத்தும் இல்லாமல் இப்போது நீங்கள் எப்படி வாழப் பழகி விட்டீர்களோ அப்படி..
ஆம் 1940-1990 க்குள் பிறந்த நாங்கள் உண்மையாகவே வரம் பெற்றவர்கள்
⚘நாங்கள் சைக்கிள் ஒட்டினோம் ஹெல்மெட் அணியவில்லை
⚘பள்ளி முடிந்ததும் தோழர்களுடன்
பொழுது சாயும் வரை
விளையாடினோம்.
⚘டி வி யின் முன் உட்கார்ந்ததில்லை
⚘உயிருள்ள தோழர்களுடன் விளையாடினோம்.
⚘இண்டெர் நெட்டில் அல்ல
⚘தாகம் எடுக்கும்போது குழாய் தண்ணீர் குடித்தோம் .
⚘மினரல் வாட்டர் அல்ல
⚘ஒரே தம்ளர் ஜூஸை மாற்றி மாற்றி நான்கு நண்பர்களும் குடிப்போம். எந்த தொற்று நோயும் வந்ததில்லை...
⚘தினமும் அரிசி சாதம் தின்போம். ஆனாலும் எடை கூடியதில்லை. சர்க்கரை நோய் வந்ததில்லை
⚘எங்கு போனாலும் வெறுங் காலுடன் நடப்போம்.
⚘எந்த பாதிப்பும் வந்ததில்லை
⚘எங்கள் பெற்றோர் எந்த ஊட்ட சத்து உணவும் தந்ததில்லை. ஆனாலும் ஆரோக்கியமாகவே இருந்தோம்
⚘எங்கள் பெற்றோர்கள் பணக்காரர்கள் அல்ல...
⚘ஆனாலும் அன்புக்கும் பாசத்துக்கும் பஞ்சம் இல்லை.
⚘ பெற்றோர்களோடே படுத்து உறங்கினோம். ஹாஸ்டல் அறைகளில் அல்ல...
⚘உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்கு முன்னறிவிப்பு இன்றி போவோம். வரவேற்பிற்கும் விருந்திற்கும் குறை இருந்ததில்லை
⚘எங்களின் போட்டோக்கள் எல்லாம் கருப்பு வெள்ளைதான். ஆனால் எங்களின் நினைவுகளோ வண்ண மயமானவைகள்
⚘எங்களின் குடும்பங்கள் எல்லாம் அன்பை கொட்டும் கூட்டுக் குடும்பங்கள். உங்களைப்போன்று தனிக் குடித்தனம் அல்ல
⚘எங்கள் தலைமுறையினர் எல்லோரும் பெற்றோர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வளர்ந்தோம்.
⚘பெற்றோர்களும் பிள்ளைகளின் உணர்வுக்கு மிகுந்த மதிப்பு அளித்தவர்கள்..
⚘சுருக்கமாக சொன்னால்
⚘WE ARE THE LIMITED EDITIONS⚘
⚘ஆகவே எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
⚘அன்பாக இருங்கள்
⚘கற்றுக் கொள்ளுங்கள்
⚘நாங்கள் இம்மண்ணிலிருந்து மறையும் வரை ...