வாழ வைக்கும் வாழை

ஆயுளை அதிகரிக்கும் வாழை இலை
மூக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் மறைந்து உள்ளன. அதேபோல் ஏராளமான மருத்துவ குணங்கள் பதிந்துள்ளன. நோய் நொடிகள் எதுவும் இன்றி நம் முன்னோர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு வாழை இலையில் உணவு உண்டு வந்ததே முக்கிய காரணம்  .

முன்பெல்லாம் விருந்து என்றாலே வாழை இலை தான் பரிமாற்றப்படும். ஆனால் தற்போது பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் தட்டுகளை பயன்படுத்துகின்றனர். இன்னும் சிலர் பேப்பர் வாழை இலையை உபயோகிக்கிறார்கள். இதனால் நம் உடலுக்கு எவ்வித நன்மையும் கிடையாது.

 வாழை இலையில் சூடான உணவை வைக்கும் போது அதில் உள்ள உப்பு, புளிப்பு மற்றும் காரம் உள்ளிட்டவை நமது வயிற்றில் உருவாகும் செரிமான ஆசிட் சுரப்பி அதிகரித்து உணவை எளிதில் ஜீரணம் அடைய செய்கிறது.
  வாழை இலையில் சூடான சாதத்தை வைக்கும் போது இலையில் உள்ள குளோரோஃபில் என்கின்ற சத்தை உறிஞ்சி நம் உடலுக்கு தருகிறது.

 தினமும் வாழ இலையில் சாப்பிட்டு வந்தால் இளநரை வருவது தடுக்கப்பட்டு நமது முடியானது நீண்ட நாட்கள் கருமையாகவே இருக்கும்.

 பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் சரும நோய்களை தடுக்க வாழை இலையில் நல்லெண்ணையை தடவி அந்த இலையை சூரிய ஒளிபடும் இடத்தில் வைக்க வேண்டும். பின்னர் அந்த இலையின் மீது குழந்தையை படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து குழந்தைக்கு வைட்டமின் டி கிடைக்கும்.

  வாழை இலையின் குளிர்ச்சியானது குழந்தையை சரும நோயிலிருந்து பாதுகாக்கும்.

 குழந்தைகள் விளையாடும் போது கீழே விழுந்து காயம் ஏற்பட்டு விட்டதா? அதனை விரைவில் குணமாக ஒரு துணியில் தேங்காய் எண்ணெயை நனைத்து காயம் அல்லது புண் உள்ள இடத்தில் வைக்கவும். அதன் மீது வாழை இலையை வைத்து கட்டினால் காயம் விரைவில் ஆறிவிடும்.

 குழந்தைகள் சின்ன அம்மை பிடியிலிருந்து சீக்கிரம் குணமாக வேண்டுமா? வாழை இலையில் தேனை தடவி அதன் மீது சில மணி நேரம் குழந்தையை படுக்க வைத்தால் கை மேல் பலன் கிடைக்கும்.

 சொரியாசிஸ் அல்லது சரும அலர்ஜியால் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை வைத்து கட்டினால் அது குணமாகிவிடும்.

 வீட்டில் இருந்து உணவை வெளியே எடுத்து செல்ல நேர்ந்தால் வாழை இலையில் வைத்து கட்டிச் செல்லலாம்.
 இதனால் உணவானது நீண்ட நேரம் கெடாமல் மணத்துடன் இருக்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை