வியர்வைக்கு குட்பை
உடலில் அளவுக்கு அதிகமாக வியர்வை சுரப்பதாலும் அதனால் ஏற்படும் துர்நாற்றத்தாலும் பலரும் அவஸ்தை பட்டுக் கொண்டிருப்பார்கள். அதை போக்குவதற்காக பாடி ஸ்பிரே, டியோடரன்ட் உள்ளிட்டு செய்வார்கள். இதனை அதிகம் உபயோகித்தால் சர்ம அலர்ஜியும் சிலருக்கு ஏற்படக்கூடும்.
ஆனால் எளிமையான சில வழிமுறைகளை கடைப்பிடித்தாலே வியர்வைக்கு குட்பை சொல்லிவிடலாம்.
நார்மலான அளவில் வியற்பது என்பதை தாண்டி ஒரு சிலருக்கு அதிகமாக வியர்த்து கொண்டே இருக்கும்.
உள்ளங்கை பாதங்களில் வியர்ப்பது மட்டுமல்லாது வியர்வை நெடியும் அதிகமாக இருக்கும். இதை தவிர்க்க அவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளிக்கலாம்.
குளிக்கும் தண்ணீரில் சிறிது கல் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து 20 நிமிடம் கழித்து குளித்து வரலாம்.
வியர்வையை கட்டுப்படுத்துவதில் வேப்பிலை அருமருந்தாகவும் கிருமி நாசினியாகவும் செயல்படும். குளிப்பதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பாக வேப்பிலையை தண்ணீரில் போட்டு விட்டு பிறகு குளிக்கலாம்.
குளிக்கும் நீரில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் மற்றும் வேப்பிலை சேர்த்து குளித்து வந்தாலும் வியர்வை துர்நாற்றம் படிப்படியாக மட்டுப்படும்.
படிகாரத்தை மிக்ஸியில் பவுடர் ஆக்கி அதை சிறிதளவு எடுத்து உள்ளங்கைகளிலும் அக்குல்களிலும் தேய்த்து 15 நிமிடம் மசாஜ் செய்து குளிக்கலாம். இப்படியே தினமும் அல்லது வாரத்தில் மூன்று முறையோ தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வியர்வை துர்நாற்றத்தை குறைப்பதில் கற்றாழை பெரும் பங்கு வகிக்கிறது. கற்றாழை ஜெல்லுடன், டீ ட்ரீ ஆயில் சேர்த்து வியர்வை அதிகம் சுரக்கும் பகுதிகளில் பூசி வரலாம்.
இதனால் வியர்வை அதிகம் சுரப்பது குறையும் வியர்வை துர்நாற்றமும் கட்டுப்படும்.