அசோலா வளர்ப்பு
குறைந்த வருமானத்தில் அதிக லாபம் தரக்கூடிய தொழில்களில் ஒன்று அசோலா வளர்ப்பு.
இதை பெண்கள் வீட்டிலிருந்து சிறிய இடத்தில் குறைவான முதலீட்டில் பகுதி நேரமாக செய்து தினசரி வருமானம் பெறலாம் .
பெரணி என்று அழைக்கப்படும் அசோலா தண்ணீரின் மேற்பரப்பில் வளரக்கூடிய ஒரு நீர்வாழ் உயிரி உரம்.
இதை கால்நடைகள் ,மீன், பன்றி மற்றும் கோழிக்கு தீவனமாக பயன்படுத்தலாம் .
இதில் தழைச்சத்து வைட்டமின் ஏ ,பி ,பி 12 (பீட்டா கரோட்டின்), புரதச்சத்து, அமினோ அமிலங்கள் ,ஆகிய சத்துக்கள் உள்ளன .
சீனா ,வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அசோலா வளர்ப்பு பிரபலமாக உள்ளது.
வளர்ப்பு முறை வீட்டின் மேல் தளம் சிறிய அறை அல்லது நிழலான பகுதியில் குறைந்த சூரிய ஒளியில் அசோலா வளர்க்கலாம் .
அதிகப்படியான வெப்பம் இதன் வளர்ச்சியை பாதிக்கும் 2 x 2 மீட்டர் நீள அகல தொட்டி அமைத்து அதன் கீழ் பகுதியில் உரச்சாக்கினை பரப்பவும்.
அதற்கு மேல் சில் பாசியை ஒரே சீராக போட்டு பின்னர் 15 கிலோ செம்மண்ணை பரப்பவும் .
இரண்டு கிலோ சாணம் மற்றும் 30 கிராம் சூப்பர் பாஸ் பேட்டை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து அமைத்திருக்கும் தொட்டியில் 10 சென்டிமீட்டர் உயரத்திற்கு ஊற்றவும் .
இந்த அளவு தொட்டிக்கு ஒரு கிலோ அசோலா விதையை தூவி லேசாக தண்ணீர் தெளித்தால் ஒரு வாரத்தில் வளர்ந்து விடும் .
இதிலிருந்து தினமும் அரை கிலோ அசோலாவை அறுவடை செய்யலாம்.
ஐந்து நாட்களுக்கு ஒரு முறை ஒரு கிலோ 20 கிராம் சூப்பர் பாஸ்பேட் கலவையை தொட்டியில் இடவேண்டும்.
மக்னீசியம் ,இரும்பு ,தாமிரம் ,சல்பர் கலந்த நுண்ணூட்ட கலவையை வாரம் ஒரு முறை இடலாம் .
10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரையும் ,மாதம் ஒரு முறை புதிய மண்ணையும், 6 மாதத்துக்கு ஒருமுறை அனைத்து இடுப்பொருட்களையும் மாற்ற வேண்டும் .
தொட்டியில் உள்ள நீரின் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கீழே இருக்க வேண்டும் ..
அறுவடைக்குப் பின் அசோலாவை சுத்தமான தண்ணீரில் அலசினால் சாணத்தின் வாசம் நீங்கும்.