பெருகட்டும் தாய்ப்பால்
1.இனிப்புச் சுவையும் குளிர்ச்சி தன்மையும் கொண்ட உருளைக்கிழங்கை அவித்து கொஞ்சம் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
2.கல்யாண முருங்கை இலையை தேங்காய் எண்ணெயில் வதக்கி சாப்பிட பால் சுரப்பு அதிகரிக்கும்.
3. தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க கற்பூரவள்ளி இலைகளை வேக வைத்து சாப்பிடுவது இந்தோனேசிய மக்களின் பாரம்பரிய வழக்கம் .
4.இரும்புச்சத்து நிறைந்த அத்தி, பேரீச்சம் பழங்களை சாப்பிடுவதால் நல்ல பால் சுரப்பு உண்டாகும்.
5. தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்களை பேரிச்சை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
6. காய்களை மசித்து செய்யப்பட்ட சூப்பு வகைகள், நார்ச்சத்து நிறைந்த கீரைகள், வைட்டமின்கள் நிறைந்த கேரட், பீட்ரூட், இரும்பு சத்துள்ள முருங்கைக்காய், நீர்ச்சத்து கனிமச்சத்து நிறைந்த சுரைக்காய், புடலங்காய் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.
7. அரைக்கீரை, முருங்கைக் கீரையை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.
8. பால் பொருட்களை சாப்பிடுவது உடன் பாதாம் பருப்பை பாலில் ஊற வைத்து அருந்தலாம்.
9. பருத்தி பாலுக்கும் பால் சுரப்பி அதிகரிக்கும் தன்மை உண்டு.
10.பால் பெருக்கி மற்றும் பிரசவ அழுக்கு அகற்றி செய்கை சுறா மீனுக்கு இருப்பதால் குழம்பில் போட்ட சுறா மீன், சுறா மீன் புட்டு ஆகியவற்றை சிறிதளவு சாப்பிடலாம்.
11.அதேபோல நீரில் ஊறவைத்த வேர்க்கடலையும் முளைகட்டிய தானிய வகைகளையும் சிறு தானிய உணவும் பால் சுரப்பை அதிகரிக்கும்.