பொக்கிஷமான புடலங்காய்

புடலங்காய்

புடலங்காயில் நன்கு முற்றிய காய்கறி உண்பது நல்லது அல்ல.

பிஞ்சு அல்லது நடுத்தர வளர்ச்சி உள்ள காயையே பயன்படுத்த வேண்டும்.

 புடலங்காய் மிகுந்த மருத்துவ குணம் கொண்ட காய்களில் ஒன்று.

 புடலங்காயை ஆண்களுக்கு அவசியமான ஒன்றாக முன்னோர்கள் சொல்கிறார்கள். அதற்கு காரணமும் உண்டு இந்த காய் ஆண்மை கோளாறுகளைப் போக்கும் தன்மை கொண்டதாக  கூறுகின்றார்கள்.

 அஜீரண கோளாறு அகன்று எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும்.

 குடல் புண்ணை அகற்றும். வயிற்றுப்புண் தொண்டைப்புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேற்கொண்ட நோயின் பாதிப்பு பெருமளவு குறையும்.

 இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை போக்கும் தன்மை உடையதாக இருக்கிறது.

 மூலநோய் உள்ளவர்களுக்கு புடலங்காய் நல்ல மருந்து.
 நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து, ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

 பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலை குணப்படுத்தும்.

 கருப்பை கோளாறுகளை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

 கண் பார்வையை அதிகரிக்க செய்கிறது.

 இதில் அதிகம் நீர்ச்சத்து இருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்பை வியர்வை சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

 வாதபித்த கபங்களால் ஏற்படும் நோய்களை போக்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை