ஜீம்முக்கு எதுக்குப்பா போறீங்க...


ஒவ்வொருவரும் ஒவ்வொரு நோக்கத்திற்காக ஜிம்முக்கு செல்வார்கள்.

 முதலில் நீங்கள் எந்த நோக்கத்திற்காக செல்கிறீர்கள்? என்பதில் தெளிவு வேண்டும்.

 உடல் எடை குறைத்தல், உடல் எடை அதிகரித்தல் , உடலை கட்டுக்கோப்பாக வைத்திருத்தல் என்ன பல காரணத்துக்காக ஒவ்வொருவரும் வருவார்கள். இந்த நோக்கத்தை பயிற்சியாளரிடம் தெளிவாக கூற வேண்டும்.

 ஜிம்முக்கு செல்வதன் நோக்கம் உடலை கட்டுபாக வைத்துக் கொள்வது மட்டுமின்றி, ஆரோக்கியமாகவும் வாழத்தான் இந்த அடிப்படையை உணர்ந்து சரியான உடற்பயிற்சியாளரை மற்றும் உடற்பயிற்சி மையத்தை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.
 உங்கள் நோக்கத்துக்கு ஏற்றார் போல் பயிற்சியையும் டயட்டீஷியன் அறிவுறுத்தலின் பேரில் உணவு கட்டுப்பாட்டையும் பின்பற்ற வேண்டும்.

 17 வயது முதல் ஜிம்முக்கு சென்று பயிற்சி எடுத்துக் கொள்ளலாம்.

 ஓடுவது, குதிப்பது ,சைக்கிளிங் இந்த பயிற்சியை எடுத்துக் கொண்டால் உடல் எடையை குறைப்பதுடன் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும்
 முடியும் .

நீச்சல் கற்றுக் கொள்ளும் மாணவர்கள் அல்லது விளையாட்டு வீரர்களுக்கு குறைந்த எடை கொண்ட பயிற்சியின் மூலம் உடலை வலிமையாக்குதல் பயிற்சி பெறலாம்.
 பயிற்சியாளரின் அறிவுரை இல்லாமல் உடனடியாக தசைகள் எடை கூட வேண்டும் என்பதற்காக ஊக்க மருந்து பயன்படுத்தும் போது பல மோசமான பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கருத்துரையிடுக

புதியது பழையவை