குடிச்சு பாத்தாதானே தெரியும்

குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேங்காய் பால் 

தேங்காய் பாலில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பி, ஒன் பி 3 ,பி5 ,பி6, இரும்பு சத்து ,கால்சியம் ,மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன .

மேலும் தேங்காய் பாலில் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் உள்ளன .

தேங்காய் பால் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுகின்றன.

 தேங்காய் பாலில் நிறைந்துள்ள மெக்னீசியம், உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
 
இரத்த கொதிப்பு
 ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் பொட்டாசியம் கலந்த உணவை உட்கொண்டால் ரத்த கொதிப்பை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். எனவே இவர்கள் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ள தேங்காய் பாலை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பொட்டாசியம் உடம்பிலுள்ள ரத்த கொதிப்பின் அளவை குறைக்க உதவும்.

சரும நாேய்
 சருமத்தில் உண்டாகும் எரிச்சல், சொரியாசிஸ், பாக்டீரியா தொற்று போன்ற பிரச்சனைகளுக்கு தேங்காய் பாலை பாதிக்கப்பட்ட இடங்களில் மருந்தாக தடவி வந்தால் விரைவில் குணமாகும்.


வயிற்றுப் புண்
 அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப்பால் மிகச்சிறந்த மருந்தாகும்.

 தேங்காய் பாலில் குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் அடங்கியுள்ளன.
 குழந்தைகளுக்கு உண்டாகும் வரட்டு இருமலை சரி செய்ய தேங்காய்ப்பாலில் கசகசா மற்றும் தேன் கலந்து கொடுக்க வேண்டும் .

எலும்பை வலிமையாக்க
உடலில் உள்ள எலும்புகளை உறுதியாக்குவதற்கு முக்கிய ஊட்டச் சத்தாக விளங்கும் பாஸ்பரஸ் தேங்காய் பாலில் அதிகம் நிறைந்துள்ளது .

எனவே தேங்காய் பாலை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

இரும்பு சத்து குறைபாடு
 இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இரும்பு சத்து குறைபாடு உள்ளது. இரும்பு சத்து குறைபாடு இருப்பதால் உடலானது ஹீமோகுளோபின் அதிகரிப்பதை தடுத்து நிறுத்தி, ரத்த அணுக்களில் போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் ரத்த சோகையை உண்டாக்குகிறது. எனவே தினந்தோறும் ஒரு கப் தேங்காய் பாலை பருகுவதன் மூலம் நமது உடலுக்கு அன்றாடும் தேவைப்படும் இரும்பு சத்தில் 25 சதவீதம் பெறலாம்.

தசை வலிமைக்கு
 தேங்காய்ப்பாலில் அதிக அளவு மெக்னீசியம் இருப்பதால் தசை வலிகளுக்கு சிறந்த மருந்தாகும். மேலும் தசைப் பிடிப்பு மற்றும் தசை வலி ஏற்படும் போது கொஞ்சம் உணவோடு சேர்த்து தேங்காய்ப்பால் பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

முடியின் வளர்ச்சி
தேங்காய்ப்பாலை மயிர்க்காலில் இருந்து நுனி வரை தடவி ஐந்து நிமிடங்களுக்கு தலையில் மசாஜ் கொடுத்து 20 நிமிடங்கள் வைத்திருந்து அலசினால் வறண்ட உடைந்த முடி, பிளந்த முடிக்கு ஊட்டச்சத்து கிடைத்து நன்கு வளர்ச்சி அடையும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை