டென்ஷன் ஆகாதிங்க பாஸ்...


டென்ஷன் தவீர்

மனதில் தன்னம்பிக்கை இருந்தால் டென்ஷன் கிட்டே வராது.
 எந்த பிரச்சனையானாலும் நிதானமாக பேசி கலந்தாலோசித்து முடிவு எடுத்துவிடலாம் .

வயதில் சிறியவர் கூட ,சிறந்த யோசனை சொல்லக்கூடிய மனம் ஒன்றுபட்டால் டென்ஷனுக்கு இடமில்லை.

 நம்முடைய முக்கால்வாசி டென்ஷன்களுக்கு நாம்தான் காரணம்.

திட்டமிடல்
 இதற்கு காரணம் அலட்சியப் போக்கும் திட்டமிடாமல் போவதும் தான்.

 எதிர்பாராத டென்ஷனும் வருவதுண்டு.

 உதாரணமாக பந்து, அடை மழை காலங்களில் சில தினங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருக்கலாம்.

 நாம் மழை பெய்யும் போது லீவு போடுவது சின்ன கிளாசாக இருந்தால் தவறு இல்லையே !

மற்றவர் வற்புறுத்தலுக்காக எதையாவது செய்துவிட்டு பணமும் கரைந்து, உடல் நலமும் கெட்டுப் போய் டென்ஷன் ஆகாமல் திட்டமிட்டு செயல்படலாமே!

மருந்துகள்
 குழந்தைகள் உள்ள வீடுகளில் சின்ன சின்னதா ஏதாவது பிரச்சனை வரத்தான் செய்யும்.

ஜலதோஷம், காய்ச்சல் முதலிய நோய்களுக்கான மருந்து மாத்திரைகளை எப்பொழுதும் ஸ்டாக் வைத்துக் கொண்டால் நடுராத்திரியில் டென்ஷன் ஆகாமல் இருக்கலாம் .

விருந்தாளிகள்
திடீர் விருந்தாளிகள் எப்போது வருவார்கள் என்று யாருக்குத் தெரியும் எதிர்பாராத அதிகப்படியான செலவுகளை சமாளிக்க எல்லா நேரமும் தயாராக இருந்து விட்டால் கடைசி நேர குழப்பமோ டென்ஷனும் வராது.

 வீட்டு வேலையோ? ஆபிஸ் வேலையோ? எது முக்கியம் ,எது அவசரம் என்று லிஸ்ட் போட்டு செயல்படுத்துங்கள் .

பில்
டெலிபோன், மின்சார பில், பால்கார்டு போன்றவற்றை ஒரு குறிப்பிட தேதியில் கட்டவும் வாங்கவும் வேண்டி இருக்கும்.

 கவனக்குறைவாக இருந்தால் பெனால்டி டென்ஷன் தான் .


பெட்ரோல்
எல்லா வீடுகளிலும் ஏதாவது வாகனம் இருந்தாக வேண்டும் .

எப்பொழுதும் பெட்ரோல் காற்று நிரப்பி வைத்து, அவ்வப்போது சர்வீஸ்க்கும் கொடுத்து நல்ல நிலையில் வைத்திருந்தால், வண்டிகளும் டென்ஷன் இல்லாமல் ஓடும்.

மின்தடை
 டார்ச் லைட், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி இவையெல்லாம் குறித்த இடத்தில் எப்போதும் இருக்க வேண்டும்.
 மின்தடை வரும்போது யாரையும் திட்டாமல் சமாளிக்கலாம். 

எதிர்பார்ப்பு
மனிதராய் பிறந்து விட்டால் பிரச்சனையை எதிர்பார்த்தாக வேண்டும்.மனம் எப்போதும் திட்டமிட்டு கொண்டே இருக்க வேண்டும்.

டிக்கெட்
 பயணம் போக இருந்தால் டிக்கெட் ரிசர்வ் செய்து விடுவது ,தேர்வு இன்ட்ரியோவுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக கிளம்புவது, இதெல்லாம் தடங்கலில் இருந்து தப்பிக்கும் வழிகள்.
குறிப்பிட்ட இடம்
 வீட்டில் உள்ள சாமான்களை குறிப்பிட்ட இடத்தில் வைத்து பழக வேண்டும். பேனா ,போன், சாவி, ரேஷன் கார்டு, பால்கார்டு எல்லாவற்றையும் ஒரே இடத்தில் வைத்து எடுத்தால் டென்ஷனுக்கு இடமில்லை.

கருத்துரையிடுக

புதியது பழையவை