உடல் பருமனில் நாம் நம்பர் இரண்டு
நமக்குத் தேவையான உணவு மிகக் குறைவுதான். ஆனால் ஒவ்வொருவரும் அதைவிட நான்கு மடங்கு அதிகமான உணவுகளை சாப்பிடுகிறோம்.
உடல் பருமனில் இந்தியாவின் தலைநகரம் எது தெரியுமா ராஜஸ்தானோ? டெல்லியோ? என்பதே பலரின் பதிலாக இருக்கும்.
ஆனால் அதில் முதலிடம் புதுச்சேரிக்கு அதற்கடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது.
வாரத்தில் ஒரு நாளாவது வெளியில் சாப்பிடும் பழக்கம் மக்களிடம் அதிகரித்து வருகிறது.
அப்படி சாப்பிடும் போது தேவைக்கு அதிகமான அதிக அளவு உணவுகளை சாப்பிடுகிறார்கள்.
சாப்பாடு என்பது தேவை என்பதை மீறி அது ஒரு பொழுதுபோக்கு என்பதாக மாறி வருகிறது.
உடல் பருமன் என்பது மூட்டு பாதிப்பு, சுவாசக் கோளாறுகள், புற்றுநோய் என பல பாதிப்புகளுக்கு அடிப்படையாக அமைவது. எனவே எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாகவும் ஆரோக்கியமாகவும் சாப்பிடுகிறோமோ? அதுதான் நல்லது.
ஒரு காலத்தில் உணவை நாம் தேடிச் சென்று பெற்று சாப்பிட்ட காலம் மாறி இன்று உணவு நம்மைத் தேடி உட்கார்ந்த இடத்திற்கே வருகிறது.
உண்ணும் அளவுக்கேற்ற உடல் இயக்கம் இன்று இல்லை.
டையினிங் டேபிள், சீரியல் பார்க்கையில், தியேட்டரில், ரெஸ்டாரன்ட்டில், இன்னையென நமது பெரும்பான்மை நேரம் உணவுக்கே போகிறது. இது கவனிக்கப்பட வேண்டிய அவசர அவசிய விசயம்.