நிலவு இல்லா பூமி...



நிலவு இல்லாத பூமி எப்படி இருக்கும்?

 வானியல் ஆராய்ச்சியில் முக்கியமான அங்கம் வகிக்கிறது.

 நிலா ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணைக்கோள்கள் இருக்கும்.

 பூமியின் துணைக்கோளாக செயல்படும் நிலாதான் துணை கோள்களிலேயே மிகப்பெரியது.

 நிலவு ஒளி இல்லாத அம்மாவாசை இரவை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.

 ஆனால் நிலா என்ற ஒன்றே இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என சிந்தித்தது உண்டா ? அப்போது பூமியின் நிலை என்னவாக இருக்கும்.

 நிலவில்லாமல் கடல் அலைகள் எழுச்சிக்கான முடியாது.

 சூரியனின் புவியீர்ப்பு உந்துதல் காரணமாக சிறிதளவு அலை மட்டுமே எழும்.

 அலைகளின் சீரான ஓட்டம் தான் பூமத்திய ரேகை பகுதியின் வெப்பத்தை துருவங்களுக்கு கொண்டு சேர்க்கிறது.

 நிலவு இல்லாவிட்டாலும் காலநிலையில் பெரும் மாற்றம் நிகழும்.

 தற்போது வளரும் தாவரங்கள், விலங்குகளில் பல இனங்கள் அழிந்து விடும் .
இரவு இன்னமும் கருமையானதாகிவிடும் .

இரவு நேரங்களில் வேட்டையாடி வாழும் ஆந்தை, வவ்வால் போன்றவை உணவு தேட மிகவும் சிரமப்படும்.

 கிரகணங்கள் நேராது.

 வானியல் ஆராய்ச்சியில் முன்னேற்றம் என்பதே இருந்திருக்காது.

 மனிதன் நிலவில் தடம் பதித்து தான் வானியல் ஆராய்ச்சியில் முக்கிய மைல் கல்லாக இருக்கிறது.

 நிலவு இல்லாவிட்டால் யுரேனஸ் கிரகம் போல பூமி 45 டிகிரி தன் பக்கம் சாய்ந்து சுழல தொடங்கும்.

 இதனால் பூமியின் ஒரு பகுதி ஆறு மாதம் இருட்டாகவும், ஒரு பகுதி ஆறு மாதம் வெளிச்சமாகவும் இருக்கும்.

 இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு பல்வேறு விபரீதங்கள் நிகழக் கூடும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை