மொழிகள் அழிந்து போவது எப்படி
உலகம் முழுவதும் மக்கள் 700க்கும் அதிகமான மொழிகளை பேசுகின்றனர்.
அவற்றின் பாதி மொழிகள் அழிவு பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றன.
அழிந்துபோன அரிதான வார்த்தைகளை நீங்கள் விலங்குகள், செடிகளுக்கு பயன்படுத்தி பார்த்திருப்பீர்கள் .
தற்பொழுது மொழியில் வல்லுனர்கள் இந்த வார்த்தைகளை மொழிகளுக்கு பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர்.
ஒரு மொழி எப்படி அழிக்கிறது?
மக்கள் அதை பயன்படுத்துவதை நிறுத்தும்போது:
பெரும்பாலும் மக்கள் தங்கள் தாய் மொழியில் பேசுவதை நிறுத்த விரும்புவதில்லை.
அவர்கள் அதை செய்ய வற்புறுத்தப்படுகிறார்கள்.
ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு குடியேறியவர்களுக்கு தங்கள் தாய்மொழி பேசும் உரிமை மறுக்கப்படுகிறது.
தங்கள் குழந்தைகளுக்கும் தாய் மொழியை கற்பிக்க முடியாத சூழலுக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.
இது ஒரு மொழி அழிவதன் தொடக்க புள்ளி.
நீண்ட காலமாக அமெரிக்கா கனடா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், பூர்வகுடி குழந்தைகள் பள்ளி விடுதியில் தங்கி படிக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது.
அந்தப் பள்ளிகளில் பூர்வகுடி குழந்தைகள் ஆங்கிலம் கற்க வேண்டியது அவசியம்.
தங்கள் தாய்மொழியில் பேசும் பூர்வ குடி குழந்தைகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது.
இது அக்குழந்தைகளுக்கு அதிர்ச்சி அளித்தது.
அந்த அதிர்ச்சியில் இருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை.
இதனால் பல பூர்வ குடி மக்களின் மொழி அழிந்தே போய்விட்டது.
சில சமயம் மொழிகள் அழிந்து போகாமல் பரிணாம வளர்ச்சி அடையும்
லத்தினை அழித்து போன மொழி என்பார்கள் நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? ஆம் லத்தினை யாரும் தங்கள் தாய் மொழியாக தற்போது பேசுவதில்லை.
உண்மையில் அது அழிந்து போன மொழி அல்ல அது பரிணாம வளர்ச்சி அடைந்த மொழி .
அதை பல்வேறு வழிகளில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
விஞ்ஞானிகள் தாவரங்கள், விலங்குகளின் பெயர்களை குறிக்க இலத்தீன் மொழியை பயன்படுத்துகின்றனர்.
கத்தோலிக்க மத வழிபாட்டில் லத்தின் மொழி முக்கிய பங்கு வகிக்கிறது.
வாடிகன் நகரின் அலுவல் மொழியாக லத்தீன் இருக்கிறது.
மொழியும் , பண்பாடும் நெருங்கிய தொடர்புடையவை.
மொழி அறியும்போது மக்கள் தங்கள் பண்பாட்டு மரபுகளை இழக்கின்றனர்.
அம்மாெழிவாயிலாக பெறப்படும் அறிவு கிட்டாமல் போகிறது .
அதனால் தான் அழிவில் இருக்கும் மொழியை பாதுகாக்க பலரும் போராடி வருகின்றனர் .
தங்கள் முன்னோர்களின் மொழியை அறிந்தவர்கள் அதை தினசரி நடைமுறையில் பயன்படுத்த ,அடுத்த தலைமுறையை தூண்ட வேண்டும்.
மொழியியல் வல்லுநர்கள் உலகெங்கும் பயணித்து அழிவில் இருக்கும் மொழியை மீட்கும் பணிகளை செய்து வருகின்றனர்.
குடும்பமும் ,குழந்தையும் கல்வித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் மேலை நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நீங்கள் உங்கள் தாய் மொழியை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலமே அதை பாதுகாக்கும் பணியை மேற்கொள்கிறீர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.