பாம்பு சட்டை என நாம் அழைக்கும் பாம்பு தோலை உங்களில் பலரும் பார்த்திருக்க கூடும்.
பாம்பு ஏன் இந்த செயலை செய்கிறது என யாரும் யோசித்து இருக்கிறீர்களா?
அதற்கான விடை இதோ:
தோளுரிக்கும் பழக்கம் பாம்புக்கு மட்டுமே உண்டு என நீங்கள் நினைத்திருந்தால் அந்த எண்ணம் தவறானது.
பிற விலங்குகளுக்கும் இது நிகழக்கூடிய ஒன்றுதான்.
மனிதர்களின் கை கால்களில் தோல் உரிவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
பெரியவர்கள் அதை உடல் வளர்ச்சியின் அடையாளம் என்பார்கள்.
ஆனால் ஊர்வலங்களில் இது தொடர்ந்து நிகழக்கூடிய செயல் தான்.
பாம்பு இதில் ஏன் தனித்துவம் ஆனது என்றால் அதன் மொத்த தோளும் ஒரே துண்டாக வந்துவிடும்.
மற்ற ஊர்வணங்களில் அப்படி கிடையாது.
விஞ்ஞானிகள் இந்த செயலை தோலுரித்தல் (Ecdysis) என்று அழைக்கிறார்கள்.
மிருகங்களில் தோல் போல் பாம்புகளின் தோல்கள் வளர்வதில்லை.
ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதன் வளர்ச்சி நின்றுவிடும்.
பின்னர் அதன் அடியில் இன்னொரு அடுக்கு தோள் வளரத் தொடங்கும்.
இந்த புதிய அடுக்கு முழு வளர்ச்சியடைந்ததும் பாம்பு தோல் உரிக்கும் செயலை செய்கிறது.
பாம்புகள் தண்ணீரில் நீந்தி பழைய தோல் உறிவதற்கான பணியை எளிதாக்குகிறது.
வாய் அல்லது மூக்குப்பகுதியை கடினமான பரப்பில் தேய்த்து பழைய தோலை கிழித்து விட்டு மெல்ல மெல்ல அதை விட்டு வெளியேறும்.
பாம்புகள் இதன் மூலம் புத்துணர்வு பெறுகின்றன.
அதன் பழைய தோளில் ஒட்டி இருக்கும் ஒட்டுண்ணிகள் அதிலேயே சென்று விடுகின்றன.
சராசரியாக பாம்பு ஆண்டுக்கு இரண்டு அல்லது நான்கு முறை தோலுரிக்கிறது.
இது பாம்பின் வயது வகை போன்றவற்றை பொறுத்து மாறுபடும்.