நிம்மதியாக உறங்க வேண்டுமா?

நிம்மதியாக தூங்க வேண்டுமா?

 நிம்மதியாக தூக்கம் ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய பரிசாகும். ஆழ்ந்த நித்திரைக்கு மருத்துவர்கள் கீழ்க்கண்ட யோசனைகளை தெரிவிக்கிறார்:

 படுக்கையில் தூங்குவதை தவிர படிப்பது ,எழுதுவது , சாப்பிடுவது போன்ற செயல்கள் கூடவே கூடாது.

 உடற்பயிற்சி சிறந்த தூக்கத்தை அளிக்கும்.

 முற்பகலில் திறம்பட உழைத்தாலும், இரவில் நன்றாக தூக்கம் வரும். 

இரவு சாப்பாட்டிற்கு பின்பு காப்பி, தேயிலை, சாக்லேட், கோலா பானங்கள் கூடவே கூடாது. இவற்றில் கலந்துள்ள காஃபின் தூக்கத்தை விரட்டும்.
 இரவு உணவாக கடினமான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
 படுக்கும் முன் சூடான பால் நல்லது.

 வெளிச்சம் இல்லாத, அமைதியான மற்றும் அறைகளில் துயில் கொள்ள வேண்டும்.

 படுக்கைக்கு செல்வதற்கு முன்னால் இன்று நான் நன்றாக தூங்குவேன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக் கொள்ளுங்கள் தூக்கம் தானாக வரும்.

 நடு இரவில் விழித்து தூக்கம் வராமல் சிரமப்பட்டால் போர் அடிக்கும் புத்தகத்தை படியுங்கள்.
 எப்போதும் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்ற அவசியமில்லை. குறைந்த நேரமே தூங்கி சுறுசுறுப்பாக செயல்பட்டால் அந்த அளவு தூக்கமே போதுமானது .

கடைசியாக மருத்துவர்கள் எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பது முக்கியமல்ல எவ்வாறு தூங்குகிறோம் என்பதே முக்கியம் என குறிப்பிடுகிறார்கள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை