அதிர்ஷ்டம் வேண்டுமா?

அதிர்ஷ்ட  காேட்பாடு 10


அதிர்ஷ்டம் என்ற ஒன்று இந்த உலகில் இல்லவே இல்லை....

 கடும் உழைப்பும் முயற்சியுமே வெற்றி தரும்.

 அந்த வெற்றியை பெற முடியாத சிலர் அதனை அதிர்ஷ்டம் என்று அழைக்கிறார்கள்.

 அதே நேரம் நம்முடைய வாழ்க்கை மட்டும் ஏன் இத்தனை சிக்கலாக இருக்கிறது என்ற கேள்வி இல்லாத மனிதன் யாரும் இந்த உலகில் இல்லை.

 அதுபோன்ற எண்ணம் உங்கள் மனதை அரிக்கும் போது நீங்கள் இந்த அதிர்ஷ்ட கோட்பாட்டை கடைபிடித்து பார்க்கலாம்.

 1. எந்த நோய் அறிகுறியும் இல்லாமல் காலையில் எழுந்திருக்கிறாயா? படுக்கையில் எந்திரிக்காமலே உயிர் துறந்த பலரை விட நீ பாக்கியசாலி.

2. படுத்த அரை மணி நேரத்துக்குள் தூங்கி விடுகிறாயா? நீ இந்த உலகில் உள்ள 50% மனிதர்களை விட நிம்மதியாக தூங்கும் வாய்ப்பு பெற்றவன்.
3. நல்ல பார்வையும், செவித்திறன், வாய் பேசாமை உள்ளிட்ட எந்த குறைபாடுகளும் உனக்கு இல்லையா? உலகில் உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கிறாய்.

3. மூன்று வேளை உணவு, நல்ல உடைகள், தங்குவதற்கு வீடு இருக்கிறதா? நீ இந்த உலகத்தில் உள்ள 70% மக்களை விட வசதியானவன்

4.உனக்கு வங்கியில் கொஞ்சம் ஆவது பணம் இருக்கிறதா? அப்படி என்றால் நீயும் ஒரு பணக்காரன். ஆம், உலகில் உள்ள 70 சதவிகிதம் மக்களுக்கு வங்கிக் கணக்கே இல்லை.

5. உன்னிடம் ஒரு கம்ப்யூட்டர் இருக்கிறதா? இந்த உலகில் உள்ள 95% மனிதர்களுக்கு பிரத்தியேக கம்ப்யூட்டர் இல்லை. எனவே, நீ பெருபேர் பெற்றவன்.
6. தோழன் அல்லது தோழியுடன் போய் டீ அல்லது குளிர்பானம் சாப்பிடுகிறாயா? அடேங்கப்பா! உலகில் உள்ள 100 கோடி மக்களுக்கு அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைப்பதே இல்லை.

7. தினமும் ஒரு முறையாவது சிரிக்கிறாயா? இந்த உலகில் 50 சதவீதம் பேர் ஒரே ஒருமுறை கூட சிரிக்க முடியாத அளவுக்கு துக்கத்தில் இருக்கிறார்கள்.

8. போர் அல்லது வெளிநாட்டு போர் நடக்கவில்லையா? அப்படி அவஸ்தைப்படும் 30 கோடி மக்களை விட உனக்கு சுதந்திரம் உள்ளது.

9. உன்னிடம் பேசுவதற்கு நெருங்கிய உறவினர்கள் யாரேனும் இருக்கிறார்களா? அப்படி இல்லாமல் வெளிநாடுகளில் வசிக்கும் 20 கோடி மக்களை விட நீ பாக்கியமானவன்.

10. உனக்கு பிடிக்கவில்லை என்றாலும் வேலை செய்கிறாயா? வேலை கிடைக்காத 50 கோடி மக்களை விட உனக்கு நல்லதே நடந்துள்ளது.


 இதுபோன்று நமக்கு கீழே உள்ளவர்கள் பற்றி ஒரே ஒரு கணம் சிந்தித்தால் போதும் நாம் எத்தனை அதிர்ஷ்டசாலி என்பதை உணர முடியும் இருப்பதைக் கொண்டு அனுபவிப்பது தான் உண்மையான மகிழ்ச்சி.

கருத்துரையிடுக

புதியது பழையவை