வயிற்று கடுப்பு நீங்க
=>தோல் நீக்கிய வெங்காயத்தை சிறு துண்டாக நறுக்கி குளிர்ந்த நீரில் நான்கு அல்லது ஐந்து தடவை கழுவி தயிர் சேர்த்து தினமும் மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
நல்ல தூக்கம் உண்டாக
=>சிறிய வெங்காயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சிறிதளவு எடுத்து அதனுடன் இரண்டு கரண்டி சர்க்கரை சேர்த்து தூக்கம் இல்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் நல்ல தூக்கம் வரும்.
தொண்டை வலி குணமாக
=>வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்று போட்டு வந்தால் தொண்டை வலி குறையும்.
பல் வலி ஈறு வலி குணமாக
=>வெங்காயச் சாற்றையும், வெங்காய நீரையும், கலந்து வாய் கொப்பளித்து வெறும் வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வந்தால் பல் வலி ஈறு வலி குறையும்.
பித்தம் பித்த ஏப்பம் நீங்க
=>நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதனோடு சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
நரம்பு தளர்ச்சி நீங்க
=>வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
மலச்சிக்கல் நீங்க
=>வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணையில் வதக்கி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.