ஏழை மக்களின் எளிய ஊட்டச்சத்து பழம் எனில் அது வாழைப்பழம்தான்.
₹5 முதல் அதிகபட்சமாகவே ₹50 வரை கிடைக்கும் இப்பழத்தில் அத்தனை சத்துக்களும் உள்ளன.
குறிப்பாக பொட்டாசியம் சத்து வாழைப்பழங்களில் அதிகம் நிறைந்துள்ளதால் தினமும் காலையில் வாழைப்பழம் சாப்பிட நாள் முழுவதும் சுறுசுறுப்பும், உற்சாகமும் நிறைந்திருக்கும்.
தினமும் காலை மற்றும் மதிய வேளையில் உணவுகளை சாப்பிடுவதற்கு முன்பு ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு , சிறிது நேரம் கழித்து உணவு சாப்பிட்டு வந்தால் , நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
கர்ப்பிணி பெண்கள் காலையில் எழுந்தவுடன் வரும் வாந்தி, குமட்டல் தலை சுற்றளால், சோர்வடைய கூடும்.
இதனால் சத்துக்கள் குறைவதையும், வாழைப்பழம் கொடுப்பதால் சரி செய்யலாம்.
தினமும் காலை உணவு சாப்பிடுவதற்கு முன்பு ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு பின்பு காலை உணவு சாப்பிட்டு வந்தால், இந்த அல்சர் புண்கள் கூடிய விரைவில் குணமாகும்.
உடல் நலத்திற்கும் , பொட்டாசியம் சத்து மிகவும் அவசியமாகிறது.
இரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் இரத்தம் சென்று வர வாழைப்பழத்தில் கலந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது.