தந்தையில்லா குழந்தைகள்


சூழ்நிலையின் காரணமாக கணவரைப் பிரிந்த  பெண்கள், கணவரை இழந்த பெண்கள் குழந்தையை பாெறுப்புடன் வளர்க்க நேரிடும். 

ஆனால், தெளிவாக யோசித்து செயல்படும்போது, குழந்தைகள் உங்களை எளிதாகப் புரிந்துகொள்வார்கள்.

 தங்கள் குழந்தைகளை ஆரம்ப காலத்தில் சற்றே தன்னம்பிக்கையோடு
தாய்-தந்தை இருவரோடும் வளரும் குழந்தைகளைப் போலவே, ஒற்றை பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகளும், உடல் மற்றும் மனதளவில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க முடியும்.

 அன்பு, பொறுப்பு, மதிப்பீடுகளோடு வளர்க்கப்படும் குழந்தைகள் அரவணைப்பு, வாழ்வியல்,  எந்தநிலையிலும் சிறந்தவர்களாகவே வளர்வார்கள்.

முதலில் உங்களால் நல்ல பெற்றோராக செயல் பட முடியும் என்று உறுதியாக நம்புங்கள்.
உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவைப் பெறுவதற்கு தயங்காதீர்கள்.

தாய்-தந்தையின் பிரிவினால் குழந்தைகள் மனதளவில் பெரிதாக பாதிக்கப்படுவார்கள். எனவே உங்கள் குழந்தைகளிடம், பெற்றோர் இருவரின் அன்பும் எப்போதும் உண்டு என்று தெரிவியுங்கள்.

குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தை அதிகப்படுத்துங்கள்.

 ஓய்வு நேரங்களில் தொலைக்காட்சி, மொபைல் போன்றவற்றில் மூழ்காமல் குழந்தைகளுடன் பேசலாம். 

இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு அவர்களுக்கு கதைகள் சொல்லலாம்.

விளையாட்டு, இசை, புத்தகங்கள் என உங்கள் குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களைப் பற்றி அவர்களுடன் அதிகமாக பேசுங்கள். 
அவற்றில் அவர்களை ஈடுபடச் செய்யுங்கள்.

நேர்மறையான செயல்களில் அதிக செலுத்துங்கள். பள்ளிக்குச் செல்லும்போதும், வீட்டுக்குத் திரும்பும்போதும் குழந்தைகளிடம் 
புன்னகைத்து, அவர்களை கட்டி அணைத்து விடை கொடுங்கள். 

அவர்களை பார்ப்பது  காெள்வதிலும்,
அவர்களோடு நேரத்தை செலவிடுவதிலும் நீங்கள் மகிழ்ச்சி அடைகிறீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.


கருத்துரையிடுக

புதியது பழையவை