கஷ்டத்திற்கு இஷ்டம்

=>*பாலுக்கு கஷ்டம் கொடுத்தால் தயிர் ஆகிறது.*

=> *தயிருக்கு கஷ்டம்கொடுத்தால் வெண்ணெய் ஆகிறது.*

=> *வெண்ணெயை கொடுமை செய்தால் நெய் ஆகிறது.*

=> *பாலை விட தயிர் உயர்ந்தது, தயிரை விட வெண்ணெய் உயர்ந்தது, வெண்ணெயை விட நெய் உயர்ந்தது.*

=> *இதனுடைய அர்த்தம் என்னவென்றால்-- அடிக்கடி கஷ்டம் - சங்கடங்கள் வந்தாலும் கூட எந்த மனிதனுடைய நிறம் மாறுவதில்லையோ, சமூகத்தில் அவருடைய மதிப்பு அதிகரிக்கிறது.*

=> *பால் ஒரு நாளைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும், பின் அது கெட்டுப் போய் விடும்.*

=> *பாலில் ஒரு சொட்டு மோர் விடும் போது அது தயிர் ஆகிறது. அது இன்னும் 2 நாட்களுக்கு இருக்கும்.*

=>*தயிரை கடையும் போது வெண்ணெய் வருகிறது. அது இன்னும் 3 நாட்களுக்கு இருக்கும்.*

--> *வெண்ணெயை கொதிக்க வைத்தால் நெய் ஆகிறது. அது ஒரு போதும் வீணாவது இல்லை.*

=> *ஒரே நாளில் கெட்டுப் போகும் பாலுக்குள் ஒரு போதும் கெட்டுப் போகாத நெய் ஒளிந்து இருக்கிறது.*
=> *உங்கள் மனம் கூட அளவற்ற சக்திகளால் நிரம்பியுள்ளது*

=>*அதில் கொஞ்சம் நேர்மையான எண்ணங்களைப் போடுங்கள்.*

=>*தனக்குத் தானே சிந்தனை செய்யுங்கள்.*

=>*தன்னுடைய வாழ்க்கையை இன்னும் சரி பாருங்கள்.*

=>*பின் அப்பொழுது பாருங்கள்.*

=>*நீங்கள் ஒருபொழுதும் தோல்வியே காணாத வெள்ளை மனதாய் செம்மைப்படுத்திய தனி மனிதனாக இருப்பீர்கள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை