இதற்கு அவனும் காரணம்


பெண்கள் விரைவாக தன் இளமையை இழக்கக் காரணம்...

ஆண்கள் சொட்டு ரத்தத்தை கொடுத்து விட்டு சொகமா போய் விடுவது

சொட்டு ரத்தத்தை பத்து மாதம் சுமந்து தன் உயிரில் அழகில் குணத்தில் என அனைத்தையும் பிறக்கும் குழந்தைகளுக்கு தந்துவிட்டு பெருமை கொள்கிறாள்

குழந்தை பேறின் போது எத்தனை லிட்டர் ரத்தம் வீணாகிறது என்பதை மருத்துவரிடம் கேளுங்கள் அப்போது தெரியும் பிரசவத்தின் பெருமை

அதுமட்டுமா இரண்டு மூன்று வயது வரை தான் பெற்ற குழந்தைகளுக்கு தன் ரத்தத்தை பாலாக தருவதும் பெண்மையே
கல்யாணம் ஆவதற்கு முன் அழகா களையா தொப்பை இல்லாது இருக்கும் பெண்கள் கல்யாணம் ஆன பின் குழந்தை பெற்ற பின்னே தான் தொப்பை விழுகிறது (பிரசவத்தின் போது வயிறு விரிந்து சுருங்குவதால்)

நல்ல கணவன் நல்ல குடும்பம் எனில் பெண்ணிற்கு கொஞ்சம் கவலை இல்லை
அதுவே குடிகார கணவனோ மாமியார் நாத்தனார் கொடுமையோ எனில் கவலையிலேயே பெண்கள் களையிழந்து போகின்றனர்

சிலருக்கு வறுமையால்

ஆக பெரும்பாலும் பெண்கள் இளமையை இழப்பதற்கு ஆண்களும் ஒரு காரணமே


கருத்துரையிடுக

புதியது பழையவை