ஒரு ப்ரொபசர் பரிசோதனைக்காக
ஒரு ஆண் எலியை நடுவுல வச்சி
ஒரு பக்கம் ஒரு பெண் எலி
அடுத்த பக்கம் கொஞ்சம் கேக் வச்சு என்ன நடக்குதுன்னு பார்த்தார்..
.
அந்த எலி ஓடிப்போய் கேக் துண்டை சாப்பிட்டுட்டு பழைய இடத்துக்கே வந்திருச்சு...
.
அடுத்து கேக்குக்கு பதிலா ப்ரெட் வச்சாரு..
அப்பவும் அதே போல வந்து ப்ரெட்டை மட்டும் சாப்பிட்டுட்டு போய்டிச்சு...
.
அவரும் வித விதமான தின்பண்டங்களை வச்சுப்பாத்தாரு ...
.
ஹூம்.. அந்த பெண் எலியை திரும்பிக்கூட பார்க்கல...
எல்லாத்தையும் சாப்பிட்டுட்டு சமத்தா போய் உக்காந்திருச்சு ...
.
உடனே ப்ரொபசர் பசங்ககிட்ட சொன்னார்...
"பார்த்தீங்களா..இந்த எலிக்கு பெண்ணை விட உணவு தான் ரொம்ப முக்கியம்னு தெரிஞ்சிருக்கு..."என்றார்.
.
கடைசி பெஞ்ச்லருந்து நம்ம ஆளுஎழுந்து சொன்னான்..
.."சார்.. நீங்க ஏன் அந்த பெண் எலியை மாத்தி பார்க்க கூடாது... ஒரு வேளை அது அந்த எலியோட மனைவியா
கூட இருக்கலாம்...." இல்லையா ?
.
அன்னைக்கி ராஜினாமா பண்ணிட்டு போனவருதான் அந்த புரொபசர் !
😄😄😄