மறுத்தாலும் கிடைக்கும்

முகத்தில் புன்னகையோடு
வலம் வந்தேன்
"கள்ளச் சிரிப்பு" என்றார்கள்

கோபங் கொண்டேன்
"சிடு மூஞ்சி" என்றார்கள்.

அதிகம் பேசாமலிருந்தேன்,
"ஊமை"என்றார்கள்.

சளசளவென்று பேசினேன்...!!
"ஓட்ட வாய் " என்றார்கள்.

புதிய தகவல்களை பரிமாறினேன்
"கருத்து சொல்ல வந்துட்டான்" என்றார்கள்.

அவர்கள் வார்த்தைகளுக்கு செவி சாய்த்தேன்,
"ஜால்ரா" என்றார்கள்.


எல்லா செயல்களிலும்
முன் நின்று செய்தேன்....!!
"முந்திரிக் கொட்டை" என்றார்கள்.

அவர்களைப் பின் தொடர்ந்தேன்,
"நடிப்பு" என்றார்கள்.

யாரைப் பார்த்தாலும் ஸலாம் சொன்னேன்
"ஏமாற்றுக்காரன்" என்றார்கள்.

சொல்வதை நிறுத்தினேன்,
 "தலைக்கனம்" என்றார்கள்.

ஆலோசனை வழங்கினேன்,
"படிச்ச திமிர்" என்றார்கள்.
சுயமாக முடிவெடுத்தேன்,
"அதி புத்திசாலி"
என்றார்கள்.

நான் கண்ணீர் விட்டு அழுததால்,
 "வேஷம்" என்றார்கள்.

நான் சிரித்த போதெல்லாம்,
 "மறை கழண்டுப் போச்சு" என்றார்கள்

எதிர் கேள்வி கேட்டால்,
வில்லங்கம் என்றார்கள்

ஒதுங்கி இருந்தால்,
"பயந்தாங்கொள்ளி" என்றார்கள்.

உரிமைக்குப் போராடினால்,
 "கலகக்காரன்" என்றார்கள்.

எதற்கும் கலங்காமல் இருந்தால்,
"கல் நெஞ்சம்" என்றார்கள்.
"நாலு பேர் என்ன நினைப்பார்கள் ????"

"நாலு பேர் என்ன பேசுவார்கள்......?"

யாரோ நாலு பேருக்காக வாழ்ந்தேனா இவ்வளவு நாள் 🤔🤔.!!

தொலைவில் கிடந்தது  வாழ்க்கை.......!!

அனைவருக்கும் பிடித்திட நாம் அலைபேசி அல்லவே....

நம்மை நாம் நேசிப்போம்

நமக்காக என்றும் சுவாசிப்போம்

கருத்துரையிடுக

புதியது பழையவை