கல்லூரி வாழ்க்கை

 வாழ்வின் அனுபவம் இங்கே தொற்றும்

 அரும்பிய மீசைகளும் முறுக்கேற்றம் பெற்றிடும் 

சட்டையின் முதல் பொத்தான் திறந்த

 நிலையிலேயே நாளெல்லாம் பயணிக்கும்

 மனதில் ஏதோ திடமான தைரியம் வந்திடும்

 அழகை ரசிக்கும் கண்களாக மாறும்

 தாவணியிடம் வீரம் எல்லாம் மண்டியிடும்

 வரவுகளைப் பற்றியே கவலை கொள்ளாமல் 

செலவுகளை சாதாரணமாக செய்திடும் மனது 

தோழனின் தோள்களில் ஏறி நின்று 

உலகை இரசிக்கும் உன்னத வாழ்க்கை

 கண்ணீர் கலன்று ஓடும் சிரிப்பதினாலயே!

 நாட்கள் ஏன் இப்படி ஓடுகிறது

 என்றே ஏங்கும் 

சுகமான நினைவுகளை சுமந்திடும் வாழ்வு

 கல்லூரி வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் இனிமையான புதையல் 

கிடைத்த பின்னே நினைவுகள்தான் மிச்சமாகும்


கூ.மு.ஷேக் அப்துல் காதர்

கருத்துரையிடுக

புதியது பழையவை