எத்தனை முறை கேட்பினும் தோல்வியே!
இனியும் கேட்டிட மனது விரும்பாதே!
என்ற எண்ணத்தில் எனக்கு உடன்பாடில்லையே!
திரும்பவும் சென்றேன் அவளிடம் நின்றேன்
என்னை காதலிப்பாயா? என்றேன்!
இதழ்களில் வழக்கமான மௌனம் நின்றன
இருப்பினும் கண்களின் அசைவில. மாற்றம் கண்டேனே!
காந்த விழி பேசியதே!
காதலுக்கு பச்சை கொடி காட்டியதே!
கூ.மு.ஷேக் அப்துல் காதர்