மகள் தந்தையின் இன்னொரு தாயல்லவா?
தாயை மிரட்டும் மற்றொரு மாமியாரே!
அப்பாவின் செல்லப் பிள்ளை இவளே!
இவளின் ஆசையை வருத்தப்பட்டு உழைத்தெனும்
நிறைவேற்றி மகிழும் உன்னதமானவர் தந்தைதானே!
செலவுகளை மட்டுமே செய்து வந்தவரோ?
மகளை பெற்றதும் சேமிப்பில் நுழைவாரே!
மனைவி சொல்லியும் தன்னை மாற்றாதவர்
மகள் சொன்னால் முற்றிலும் மாற்றுவாரே!
மகள் என்னும் மந்திரம்
தந்தையின் அன்பைப் பெருக்கும் ஆயுதம்!
கூ.மு.ஷேக் அப்துல் காதர்
Spr.........
பதிலளிநீக்குTnx
நீக்கு