அந்த நாள் ஞாபகம் இனிமைதானே!
ஓரிடம் நில்லாமல் ஓடிடும் குழந்தைகள்
விழாக்களில் இன்பம் நிறைந்து வழிந்திடுமே!
வார்த்தைகளே பத்திரங்களாய் இறுதிவரை நின்றிடுமே!
குடும்பங்கள் இணைந்து ஒன்றாய் வாழ்வரே!
நோய்களும் என்றாவது தாெட்டுவிட்டு ஓடிடுமே!
ஆரோக்கியம் நண்பனாய் உடனே இருக்குமே!
தொலைத் தொடர்புகள் இல்லாத பாெழுதுமே
உறவுகள் இடையே விரிசல்கள் இல்லையே!
எதுவும் இல்லாமல் நிம்மதி இருந்ததே!
இன்றாே எல்லாம் உண்டு ஆனால்
நிம்மதியைத் தேடி ஓடிப் போகிறோமே!
கூ.மு.ஷேக் அப்துல் காதர்
Feeling like some memories
பதிலளிநீக்கு