முகிலினங்கள் அலைகிறதாே

 முகிலினமே எங்கேச் சென்று கொண்டிருக்கிறாய்

 வெள்ளையாய் பூத்தவளே கருமையாய் மாறுகிறாயே!

 உந்தன் கருமையை கண்டாலே பலருக்கு

 ஆனந்த கொண்டாட்டமாக அல்லவா உள்ளது

 நீயே திடீரென நிற்காமல் பாெழிந்தால்

தேசத்தின் விளைவுகள் மோசம்தானே!

அளவாக பாெழிந்து ஆனந்தம் கொடு!

 அவ்வப்போது பொழிந்து குளுமை காெடு!

நீரின் வறட்சியை இல்லாமல் செய்திடு!

 உங்களுக்குள்ளே மோதியே சண்டையிட்டு

இடியாய் இடிந்து விழுந்திட வேண்டாமே!

 உங்களின் சண்டை எங்களுக்கு பேராபத்தே!

 இனிமையாய் செல்லுங்கள் கருணையாய் வந்திடுங்கள்!


கூ.மு.ஷேக் அப்துல் காதர்

1 கருத்துகள்

புதியது பழையவை