தோழா வெற்றிப் படிகளை பற்றிடு!
தடைகள் ஆயிரம் உன்னைத் தொடும்
உன்னை பின்னோக்கிச் சென்றிடச் சொல்லுமே!
அவைகளை மிதித்து முன்னோக்கிச் சென்றிடு!
அடுத்தவர் சாெல் அம்பாய் துளைத்தாலும்
காயம் பெரிதல்ல இலட்சிய பாதையிலே!
வெற்றிப் படிகளை நீ தொட்டாலே போதுமே!
அது உன்னைக் கூட்டிச் செல்லும்
உச்சத்திற்கு தன்னின் வழியே!
முயற்சி என்ற ஊன்றுகோலைக் ஊண்டிடு!
கீழே விழாமல் பிடித்துக் கொள்!
கூ.மு.ஷேக் அப்துல் காதர்