அரக்கர்கள்

 அரக்கர்கள் முற்றிலும் அழிந்திடவில்லையே!

 இன்றும் மண்ணில் வாழ்கின்றனரே!

 மக்களை எப்படியாவது பிரிப்பரே!

 ஒற்றுமை இவர்களுக்கு ஏற்றிடாது

 மதத்தால் பிரித்து சிரிப்பர்

 சாதியால் அடித்து துன்புறுத்துவர் 

இச்சைகளைப் போக்கிடவே இவர்கள்

 சாதி மதம் பார்த்திடாமல் 

சிறுமிகள் என்றாலும் விட்டுவிடமாட்டார்கள்

 இவர்களை இனம் கொள்வோம்

 மனித உருவிலே இன்றும் 

வாழ்ந்திடும் அரக்கர்கள் இவர்கள்!

 வாழ்ந்திட தகுதி இல்லாதவர்கள்

 இவர்களை கண்டு பிறர்

எழுந்து முளைத்திட இல்லாமல்

 வேரோடு அழிப்போம்!

மனித குலத்தை காப்போம்!


கூ.மு.ஷேக் அப்துல் காதர்

1 கருத்துகள்

புதியது பழையவை