வானொலி நாட்கள்

 அலைப்பேசி இல்லாமல் அலைந்த காலம்

 ஆங்காங்கே போட்டி போட்டு ஓடுவர்

 வேலை செய்யும் தொழிலாளிக்கு பொழுதுபோக்கு

 இயந்திரம் ஒன்று இசைத்துப் பாடும்

 ஒலிகளை கேட்கவே செவிகள் சாயும்

 மரியாதை இதை வைத்தே கிடைத்திடும்

 நாட்டு நடப்பு இதுவே சொல்லிடும்

 அப்படி என்ன இயந்திரம் என்கிறீர்களா?

 அதுதான் மனதைக் கவர்ந்த வானொலி

 பலரை மகிழ்ந்திடச் செய்த ஒலி

 இன்றும் ஆங்காங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறது


கூ.மு.ஷேக் அப்துல் காதர்

கருத்துரையிடுக

புதியது பழையவை