எந்தன் வாழ்வு இருளில் உள்ளதடி
எந்தன் இல்லமாே ஒளியின்றி தவிக்குதடி
தாவணி போட்ட தேவதை நீயடி/
உன்னால் பித்தனாக மாறியே போனேனடி
நிழலாய் தொடருகிறேன் எங்கும் நானடி
சிரித்ததை விரல்களால் மூடுவது ஏனடி
வெட்கம் சிந்தியே அழகானது மேனியடி
உன்னால் ஒன்று செய்திட முடியுமாயடி
எந்தன் வாழ்க்கையில் விளக்கேற்ற வருவாயடி
உன்னால் என் உலகமே பிரகாசமாகுமடி
கூ.மு.ஷேக் அப்துல் காதர்