மனதை மயக்கும் மழலைகள்

 மனதை மயக்கிடும் அழகு மழலைகள்

 அவர்கள் அழுதாலும் அழகு குறையாதே!

 அவர்கள் சிரித்தாலே இவ்வுலகமே இரசிக்குமே!

 பிள்ளை பாக்கியம் வேண்டியே பலரும் 

தவங்கள் பலவும் இருந்தும் பெறுகிறார்களே!

 ஒவ்வொரு நாளும் ரசனையின் உச்சியில்

 சென்று வந்திட்டே ஆனந்தம் கொள்கிறார்களே!

 அம்மா அப்பா என்றே அழைத்திடும்

 பொழுதே இவ்வுலகை மறந்து பறக்கின்றனர் 

மழலையை கட்டி அணைத்துக் கொஞ்சுகின்றனர் 

பிஞ்சு விரல்களால் முகத்தில் எச்சில்

 கோலம் போட்டு அடித்து சிரித்தாலும்

 ஆடைகளில் சிறுநீர் கழித்து வைத்தாலும்

 தீட்டிடவே தோன்றுமா அக்குழந்தைகளை

 அப்பொழுதும் அள்ளி அணைத்து முத்தமிடுவதே

 மழலை நம்மீது வைத்த வசியமே!


கூ.மு.ஷேக் அப்துல் காதர்

கருத்துரையிடுக

புதியது பழையவை