நினைவுகள்
----------------------------
நினைவுகள் கூடிய போகுது மனிதனுக்கு
பலவும் மறந்திட பார்க்குது அவனுக்கு/
எததோ மறந்து சிந்தனை பறந்திடலாம்/
ஆனால் செல்லாமல் போன காதல்/
சொல்லாததால் செல்லாமல் ஆகிய காதல் /
எப்படி நினைவுகளில் நீங்கிட முடியும்/
தூரமாய் நின்று பார்த்த பார்வைகள்/
அவள் சிரித்தாள் எத்தனை பூக்கள் பூத்ததோ?/
காற்று அவளின் துப்பட்டாவை என்/
மேலே மோதிடச்செய்து அழகு பார்த்தது/
சொன்னால் பார்க்கவிடாமல் தடுத்திடுவாளோ என்றே/
தினமும் வார்த்தைகள் திக்குமுக்காடி நின்றது/
மனதிலே மரணம் இல்லாமல் வாழ்கிறது/
செல்லாமல் போன புனித காதல்/
நினைவுகள் எங்கும் அவளின் நினைவலைகள்தான்/
-குட்டிபாபு -