சீப்பை பயன்படுத்துவது எப்படி?

சீப்பை பயன்படுத்துவது எப்படி? 

நாம் செய்யும் பல தவறுகளில் சீப்பை தவறாக பயன்படுத்துவதை முதல் தவறு.

 நம்முடைய முடி மிகவும் உணர்திறன் மிக்கது .

சற்று கவனம் இல்லாமல் சீவினால் கூட முடி உடையும் அபாயம் ஏற்பட்டுவிடும்.

 சிக்கலாவதிலிருந்து முடியை காப்பாற்றும் முக்கிய பொறுப்பு சீப்புக்கே உள்ளது.

 சீப்பு நினைத்தால் கொத்து கொத்தாக முடியை இழுத்து சாகடித்து விடும்.

 ஆனால் அதற்கு முன்னர் சீப்பை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது அவசியம்.

 சிப்பில் சிக்கு மாட்டாமல் இருப்பதற்கு சிக்கு சீப்பில் மாட்டினாலோ அல்லது ஏற்கனவே முடி சிக்காக இருக்கிறது என்றாலோ முதலில் சீவாமல் அந்த சிக்கை எடுப்பதற்கான வழியை கையாளுங்கள்.

 விரல்களை பயன்படுத்தி மென்மையாக முடிகளை பிரியுங்கள்.

 முடிச்சை எளிதாக வெளியேற்ற ஸ்பிரேகள் கிடைக்கின்றன.

 இந்த முடிச்சை வெளியேற்ற செய்யும்.

 நடுத்தர தடிமன் கொண்ட முடிக்கு லோஷன் பயன்படுத்தவும் முடி மிகவும் கரடு முரடாக இருந்தால் கிரீம் வகைகள் பயன்படுத்தலாம் .

தலைக்கு குளிக்கும் போது தலைக்கு குளித்த பிறகு முடி சிக்காகாமல் இருப்பதற்கு குளிப்பதற்கு முன் சீப்பை பயன்படுத்தி நன்றாக சிக்கு எடுத்து விட வேண்டும் .

இதனால் முடி உடைதல் மற்றும் உதிர்தலை தடுக்கலாம் .

பெரிய சீப்பு சிக்கு முடியும் மீது ஸ்பிரே பயன்படுத்திய பிறகு முடிச்சு வெளியேற்ற அகலமான பல் கொண்ட சீப்பு பயன்படுத்தவும்.

 இதை முடிச்சுகளை மென்மையாக அவிழ்க்க உதவும்.

 எனினும் பிளாஸ்டிக் சீப்புகள் தவிர்க்க வேண்டும் .

அதற்கு மாற்றாக கூந்தல் ஈரமாக இருக்கும் போது ரப்பர் சீப்பையும் உலர்ந்த பிறகு மர சீப்பையும் பயன்படுத்துங்கள் .

சிக்கு ஏற்பட்டு இருக்கிறதா?  பெரிய முடிச்சுகள் இருக்கும் போது சீப்பு கொண்டு சீவினால் முடித்து சேதம் ஏற்படலாம் .

சிக்கு இருக்கும் இடங்களில் கைவிரல்களைக் கொண்டு மென்மையாக முடியை பிரித்து மேலிருந்து கீழாக கை விரல்களை இயக்க வேண்டும்.

 சிக்கல் அதிகமாகி விரல்களால் விடுபட முடியவில்லை என்றால் அதிகம் சிரமப்பட வேண்டாம்.

 சுருள் முடி கொண்டவர்களின் கவனத்திற்கு சுருள்முடி ஆழமான கண்டிஷனுக்கு கண்டிஷனர் பயன்படுத்தலாம்.

 மேலிருந்து கீழாக சீவ வேண்டாம்.

 இது மேலும் சிரமத்தை உண்டாக்கும்.

 சுருள் முடிக்கு எப்போதுமே பரந்த பல்கொண்ட சீப்பு அவசியம் .

கீழிருந்து முடிச்சுகளை பிரித்து படிப்படியாக சீவுங்கள்.

 உலர்ந்த முடியில் சீப்பு பயன்படுத்த வேண்டாம் .

இந்த முறைகளை பின்பற்றி விரல்கள் மற்றும் சீப்புகளை பயன்படுத்தி சிக்கலை சரி செய்யுங்கள் .
வாழ்க்கை சிக்கலை விட கொடிய சிக்கல் இந்த முடிச்சுகள் என்பதை மறந்து விடாதீர்கள்.

1 கருத்துகள்

  1. அடடா சீப்பு பயன்படுத்தும் முறையில் இவ்வளவு இருக்கிறது, அருமை 👌💐💐

    பதிலளிநீக்கு
புதியது பழையவை