பட்டுப் புடவை அணியும் பெண்களுக்கான டிப்ஸ்

பட்டுப் புடவை அணியும் பெண்களுக்கான டிப்ஸ்
புடவையை உடுத்துவதற்கு முன்பு உங்கள் காலணிகளை அணிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் காலணியின் உயரத்துக்கு தகுந்தவாறு புடவையின் உயரத்தை சரியாக அளத்து அணிய வசதியாக இருக்கும்.

 அகலமான உள் பாவாடைகள் உங்களை பருமனாக காட்டக்கூடும்.
 எனவே அவற்றைத் தவிர்த்து ஷேப்வேர் அணியுங்கள்.

 இதன் மூலம் புடவையில் உங்கள் தோற்றமும் மேம்படும் .

உடலை சுற்றி புடவையை அணிந்த பிறகு மடிப்புகள் வைப்பதை விட முந்தைய நாள் இரவே உதரி இஸ்திரி செய்து அழகாக மடிப்புகள் எடுத்து சேஃப்டி பின் போட்டு வைப்பது உங்கள் சிரமத்தை குறைக்கும்.

 புடவை அணிய உதவும் பின்களை புடவையின் நிறத்திற்கு ஏற்ப வாங்கி பயன்படுத்துங்கள் .

தரமான பின்களை மட்டும் வாங்குங்கள்.

 இதன் மூலம் புடவை சேதம் அடையாமல்  பாதுகாக்க முடியும்.

 உங்கள் உடலுக்கு ஏற்ற துணி வகைகளை தேர்ந்தெடுங்கள்.

 சில துணி ரகங்கள் உடல் பருமனை மேலும் அதிகரித்து காட்டும் .

அதிக எடை கொண்டவர்கள் அத்தகைய ரகங்களை தவிர்ப்பது நல்லது.
 புடவையைப் போலவே அதற்கு சரியாக பொருந்தக்கூடிய ரவிக்கையை தேர்ந்தெடுப்பதும் முக்கியமானது.

கருத்துரையிடுக

புதியது பழையவை