தும்பல் தீர தீர்வுகள்
தூசியை தட்டும் போதும், உதறும்போதும், ஒட்டடை அடிக்கும் போதும், மாசுபடுத்தி சாலையை கடக்கும் போதும் தூசின் காரணமாக தும்பல் வரும்.
உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் தூசுகள் காரணமான நுண்ணிய கிருமிகள் போன்றவை மூக்கின் வழியாக நுரையீரலுக்குள் செல்லும்போது ஹிஸ்டமைன் என்ற தும்பல் சுரப்பியை தூண்டும்.
இதனால் தும்பலின் போது நீர் துளிகளும் வெளியேறும்.
இது உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவதற்கான ஒரு செயல் தானே தவிர நோய் கிடையாது.
தீர்வுகள்
தூசுகள் நிறைந்த இடத்திலிருந்து அகன்று விட வேண்டும்.
பனி, இளங்காலை நேரத்தில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.
முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு செல்லலாம்.
ஈரமான இடத்தில் நிற்பதை தவிர்க்க வேண்டும்.
மூக்கை பலமாக சிந்தக்கூடாது.
டாக்டர் பரிந்துரைக்காகாத எந்த மருந்துகளையும் முக்கில் விடக்கூடாது. இதனால் மூக்கு அடைத்து விட கூடும்.
அடிக்கடி மூக்கினுள் கை வைப்பதையும், மூக்குப்பொடி போடுவதை செய்யக்கூடாது.
துணி முனையை சுருட்டி மூக்கில் நுழைத்து செயற்கையாக தும்மலை வரவழைக்கக் கூடாது.
தும்பும் போது கைகளை மறைத்துக்கொண்டு தும்ப வேண்டும்.
வாய் திறந்து தும்பும் போது அருகில் இருப்பவர்களுக்கும் திரும்பித் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
சைனஸ் இருப்பவர்கள் சூடான தண்ணீரில் யூகலிப்டிஸ் ஆயிலை போட்டு ஆவி பிடிக்கலாம்.
ஜலதோஷத்தால் தும்பல் எனில் மூக்கு சிந்தும் போது அடிக்கடி கைகளை கழுவி கொள்வது அவசியம்.
நார்ச்சத்து நிறைந்த பழங்கள், முளைகட்டிய பயிர்கள், கீரைகள் சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யலாம்.
மிதமான சூட்டில் சூப், ரசம், இஞ்சி, சுக்கு, கசாயம் என குடிக்க சளி இலகி எளிதில் வெளியேறும்.
சுவாச மண்டலத்தை வலுப்படுத்த உதவும் .
பிராணாயாமம், மூச்சுப் பயிற்சி, யோகாசனப் பயிற்சிகள் நல்ல பலனைத் தரும்.
துளசிச்சாறு அல்லது தூதுவளை சாறு தினம் இரண்டு ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் சளி, இருமல், நெஞ்சில் கபம், மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
மேலும் தினமும் இரண்டு துளசி இலைகளையும் மெல்லலாம்.
கற்பூரவள்ளி சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் மூக்கில் நீர் கொட்டுதல், தலைவலி குணமாகும்.
சளி, இருமல், ஆஸ்துமா, தொடர் தும்பல் சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் மூலிகை துளசி தேநீர், தூதுவளை சூப், எள்ளு லட்டு, முருங்கை கீரை அடை, வில்வ சூப் என மூலிகை வைத்தியமாக சேர்த்துக் கொள்ள நல்ல நிவாரணம் பெறலாம்.
Actually I have heavy sinus problem thanks for the tips
பதிலளிநீக்கு