கை கால்களுக்கான மாஸ்க்குகள்
1. தக்காளி
தக்காளியை சரிபாதியா அறிந்து கொண்டே அவற்றை உங்கள் கை மட்டும் கால்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள்.
15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின்பு குளிர்ந்த நீரால் கழுவ, கை மற்றும் கால்களில் உள்ள கருமை நீங்கும் மற்றும் முக சுருக்கங்கள் அனைத்தும் மறையும்.
இந்த முறையை தினமும் செய்து வர வேண்டும்.
2. வாழைப்பழம்
வாழைப்பழத்தை தினமும் நன்றாக மசித்து அவற்றை கை மற்றும் கால்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்வதினால் கை மற்றும் கால்களில் உள்ள சுருக்கங்கள் மறைவதுடன் கை மற்றும் கால்கள் மிகவும் மென்மையாகவும் இருக்கும்.
இந்த முறையை தினமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை இருந்தாலும் வாரத்தில் இரண்டு முறையாவது செய்து வரவும் .
3. ஆலிவ் ஆயில்
தினமும் ஆலிவ் ஆயிலை உங்கள் கை மட்டும் கால்களில் நன்றாக தடவி சுமார் 30 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.
பின்பு குளிர்ந்த நீரால் கழுவும் அல்லது குளிப்பதற்கு முன் இந்த முறையை பயன்படுத்தலாம் இவ்வாறு செய்வதினால் கை மற்றும் கால்களில் உள்ள சுருக்கங்கள் மறைய செய்வதுடன் சரும செல்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
4. அன்னாசி பழம்
அன்னாசி பழத்தை பேஸ்ட் போல் அரைத்துக் கொண்டு அவற்றை கை மற்றும் கால்களில் நன்றாக தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
பின்பு 15 நிமிடங்கள் வரை காத்திருக்கவும்.
அதன் பிறகு குளிர்ந்த நீரால் கைகள் மற்றும் கால்களை கழுவும் இவ்வாறு செய்வதினால் கைகள் மற்றும் கால்களில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கருமையான நிறங்கள் மறைந்துவிடும்.