சீஸ் வரலாறு

சீஸ் வரலாறு 
பிரான்சின் விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர் ஆல் 19 ஆம் நூற்றாண்டில் கரந்த பாலையோ சுத்தமான கல்லையோ நீண்ட காலத்துக்கு பாதுகாத்து வைப்பது எப்படி என்று தெரியாமல் காலம் காலமாக உலகமே தவித்துக் கொண்டிருந்தது.

 வேதி நொதித்தல் நிகழ்வு நடக்கும் போது அதன் நுண்ணுயிரிகளின் பங்கு இருப்பதை பாஸ்டர் கண்டுபிடித்தார்.

 பாலை குறிப்பிட்ட வெப்பத்தில் சூடாக்குவதால் அதில் உள்ள நுண்ணுயிரிகளை அழிக்கலாம்.

 அதேநேரம் பிற ஊட்டச்சத்துக்கள் குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.

 இப்படி செய்தால் பால் இறுதியில் கெட்டுப்போகாது என்ற பாஸ்டரின் அவசியமான கண்டுபிடிப்புக்கு அவரது பெயரை வைக்கப்பட்டது Pasteurization.

 இதற்குப் பிறகு சீஸ் தயாரிப்பில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன.

 எளிதில் கெட்டுப் போகாத சீஸ் கட்டிகள் கிமு 2000 ஆண்டை சேர்ந்த எகிப்தின் பழமையான கல்லறை ஓவியங்களில் சீஸ் தயாரிப்பது போன்ற ஓவியங்கள் காணக் கிடைக்கின்றன .

ஆதி எகிப்தில் சீஸ் என்பது கடவுளுக்கான மிகவும் புனிதமான பொருளாக மதிக்கப்பட்டு இருக்கிறது.

 ஆனால் சீஸ் தயாரிக்கும் வித்தையை மத குருமார்கள் மட்டுமே தெரிந்து வைத்திருந்தார்கள்.

 அதை ரகசியமாக பாதுகாக்கவும் செய்தார்கள் .

ரோமானிய சாம்ராஜ்யத்திலும், கிரேக்க சாம்ராஜ்யத்திலும் சீஸ் என்பது வசதி மிக்கவர்களின் உணவாகத்தான் இருந்து வந்துள்ளது.

 ரோமானியர் சீஸ்களை வேறு வேறு விதங்களில் தயாரிக்க முடியும் என்று அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றார்கள் .

ரோமானியர்களின் சமையலறையில் சீஸ் தயாரிப்பதற்கு என்றே Caseale என்ற ஒரு பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.

 முதலாம் நூற்றாண்டை சேர்ந்த ரோமின் வரலாற்றாளர் ப்ளினி எழுதிய நேச்சுரல் ஹிஸ்டரி என்ற நூலில் இருக்கும் குறிப்பின்படி சீஸ் ஐரோப்பியாவின் பல பகுதிகளில் இருந்தும் ரோம் நகரத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டது தெரிய வருகிறது.

 விதவிதமான சீஸ்களை சுவை பார்ப்பது என்பது அங்கே கௌரவத்துக்குரிய செல்வாக்கை வெளிக்காட்டும் விஷயமாக கருதப்பட்டது.

 கிபி 1815இல் சுவிட்சர்லாந்தில் உலகின் முதல் சீஸ் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது. இது மிகச் சிறிய தொழிற்சாலை.

 கிபி 1851 ஜே சி வில்லியம்ஸ் என்ற பிரெஞ்சு பண்ணைக்காரர் நியூயார்க்கில் மிகப்பெரிய அளவில் சீஸ் தொழிற்சாலை ஒன்றை தொடங்கினார் .

இன்றைக்கு பிரிட்டனில் சுமார் 700 வகையான சீஸ்கள் புழக்கத்தில் இருக்கின்றன.

 இத்தாலியிலும் , பிரான்சிலும் சுமார் 400 விதமான சீஸ்கள் கிடைக்கின்றன.

 அமெரிக்காவில் சுமார் 300 விதமான சீஸ்கள் சந்தையில் விற்கப்படுகின்றன.

 உலக அளவில் அதிகம் சீஸ் உற்பத்தி செய்யும் நாடு பிரிட்டன்
 ஆண்டுக்கு சுமார் 9 மில்லியன் டன்.

 அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலிய நாடுகள் அடுத்தடுத்து இடங்களில் இருக்கின்றன.

 அமெரிக்காவின் வருடாந்திர பால் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு பால் சீஸ் உற்பத்திக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

 அமெரிக்காவில் தயாரிக்கப்படும் சீஸ் பெரும்பகுதி பீசா தயாரிக்கவும் ,பர்கர் தயாரிக்கவும் உபயோகிக்கப்படுகிறது.

 உலகில் அதிகம் சீஸ் உண்பவர்கள் டென்மார்க்கை சேர்ந்தவர்களே.

 பசும்பாலை கொண்டு சீஸ் தயாரிப்பதில் ஜெர்மனிக்கே முதலிடம்.

 தெற்கு சூடானில் வெள்ளை ஆட்டுப்பால் சீஸ் அதிகம் தயாரிக்கப்படுகிறது.

 கிரில் செம்மறி ஆட்டுப்பால் சீஸ் பிரபலம் .

எருமைப்பால் சீஸ் தயாரிப்பில் முதலிடம் இருக்கும் நாடு எகிப்து .
உலக அளவில் சுமார் 1800க்கும் மேற்பட்ட வகைகளில் சீஸ்கள் தயாரிக்கப்படுகின்றன.

கருத்துரையிடுக

புதியது பழையவை