உடல் எடையை குறைக்கும் கருவேப்பிலை
கருவேப்பிலை உடல் எடையை குறைக்க உதவும்.
தினமும் பல் துலக்கிய பின் வெறும் வயிற்றில் சிறிது கருவேப்பிலை உருண்டையை சாப்பிட்டு வர உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும் .
சளியால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் கருவேப்பிலையை துவையலாக அரைத்து உண்ண சளி தொல்லை குறையும்.
கருவேப்பிலையில் ஆண்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ளதால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
நீரழிவு நோய்களின் சர்க்கரை அளவை குறைப்பதிலும் கருவேப்பிலை பெரும் பங்கு வகிக்கிறது.
கண் பார்வை பிரச்சினையை சரியாக்கி பார்வை தெளிவிற்கு பெரிதும் உதவுகிறது.
தலைமுடி கருப்பாக கருவேப்பிலை, மருதாணி, கரிசலாங்கண்ணி அரைத்து அடையாளத் தட்டி காயவைத்து எண்ணெயில் போட்டு அந்த எண்ணெயை தலையில் தேய்த்துவர முடி வளர்ச்சி அதிகரிக்கும் இளநரை தடுக்கும்.
உடல் உஷ்ணம் குறையும் .
பித்தத்தால் ஏற்படும் மயக்கம் வாந்தியை கட்டுப்படுத்தி உடலை சமநிலைப்படுத்தும் கருவேப்பிலையை அப்படியே உணவில் சேர்ப்பதை விட பொடியாக்கி சமையலின் போது சேர்க்க அதன் முழு பலனும் கிடைக்கும்.