சேய் தண்ணீர் மகத்துவம்
சேய் தண்ணீர் என்றால் கருப்பட்டியை சுத்தமான தண்ணீரில் கரைத்து வடிகட்டிய திரவம் .
பிறந்த குழந்தையின் வாயில் மூத்த தாய் மாமன் இதை சில துளிகள் இடுவதை தொன்று தொட்டு பழக்கமாக கொண்டு உள்ளோம்.
சேய் தண்ணீர் இன்று சேனை தண்ணீராக பெயர் மாற்றம் பெற்றுள்ளது.
குழந்தை பிரசவித்த பின் ஏற்படும் உடல் வலியை அடிக்கடி வரும் அழுகையை நிறுத்த சேய் தண்ணீர் பயன்படும்.
சேய் தண்ணீர் தயாரிப்பு முறை
100 - மில்லி லிட்டர் காய்ச்சி ஆறிய தண்ணீரில் 24 கிராம் கருப்பட்டி அல்லது சர்க்கரையை கலந்து பின்னர் கரைத்து வடிகட்டி குழந்தையின் வயது எடைக்கு ஏற்ப வழங்கினால் வலியால் ஏற்படும் அழுகை உடனே குறையும்.
சேய் தண்ணீர் என்ற சர்க்கரை தண்ணீருக்கு வலியை நீக்கும் தன்மை ஐந்து நிமிடம் முதல் ஏழு நிமிடம் வரை இருப்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.