நரை முடியை தடுக்கும் யோகாசனங்கள்
நரை முடி வருவதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம் யோகா செய்வதால் குறையும் தலைமுடியின் வேர் பகுதிக்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் முடி உதிர்தல் நின்று அடர்த்தி அதிகரிக்கும்.
இதற்கு உதவும் யோகாசனங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
உஷ்ட்ராசனம்
யோகா விரிப்பில் முழங்காலில் நின்று பின்பக்கமாக லேசாக முதுசைவழித்து இரண்டு கைகளினாலும் இரண்டு குதிங்கால்களை பிடிக்க வேண்டும்.
முகம் மேலே பார்த்தவாறு இருக்க வேண்டும் இவ்வாறு செய்வதால் உச்சந்தலைக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து நரை முடி மற்றும் முடி உதிர்வு குறையும்.
இந்த ஆசனம் தொடர்ந்து செய்வதால் தைராய்டு சுரப்பியில் உள்ள பிரச்சனைகளையும் குறைக்கலாம்.
அதோ முக ஸ்வானாசனம்
பாதங்களும் உள்ளங்கைகளும்தரையில் படுமாறு மேசை போன்ற வடிவில் நிற்க வேண்டும் பின்னர் மார்பு பகுதியை முழங்கால் நோக்கி தள்ளியவாறு இடுப்பை மேல் நோக்கி உயர்த்தி மலை போல வளைத்து நிற்க வேண்டும்.
முகம் கால்களை பார்த்தவாறு கீழ்நோக்கி இருக்க வேண்டும்.
இந்த ஆசனத்தை தினமும் சில நிமிடங்கள் செய்து வந்தால் நரைமுடி மறைந்து இயற்கையான கருமை நிறத்தை பெற முடியும்.
பவன முக்தாசனம்
முதுகுப்பகுதி தரையில் படுமாறு படுத்து கால்களை மடக்கி தலையை தூக்கி கைகளால் முழங்கால்களை கட்டிக்கொண்டு நெற்றி முழங்காலை தொடுமாறு செய்ய வேண்டும் .
இந்த நிலையில் தாடை பகுதி மார்பை நோக்கி இருக்க வேண்டும்.
வயிற்றுப் பகுதியில் அழுத்தம் ஏற்படுவதால் குடல் இயக்கம் சிறாகும் நரை நீங்கும்.
திரிகோனாசனம்
இரண்டு கால்களையும் விரித்து நிமிர்ந்து நின்று கைகளை பக்கவாட்டில் விரித்து உள்ளங்கை பூமியை பார்த்தவாறு வைக்க வேண்டும்.
பின்னர் உடலை வலது புறமாக வளைத்து வலது கை வலது கால் அருகில் இருக்கும் மாறும் இடது கை மேல்நோக்கி இருக்குமாறு நிற்க வேண்டும்.
இதே போல் இடதுபுறமும் செய்ய வேண்டும்.
ஹலாசனம்
முதுகுப் பகுதி தரையில் படுமாறு நிமிர்ந்து படுத்து இரண்டு கைகளையும் பக்கவாட்டில் உடலை ஒட்டி வைக்க வேண்டும்.
பின்னர் கால்களை மெதுவாக உயர்த்தி தலைக்கு பின்னால் கொண்டு போய் கால் விரல்களை தரையில் தொடுமாறு வலிக்க வேண்டும்.
அனைத்து ஆசனங்களையும் மருத்துவரின் ஆலோசனையுடன் சிறிது நேரம் இடைவெளி விட்டு செய்ய வேண்டும்.
தினமும் இவற்றை சீராக கடைபிடித்தால் எதிர்பார்த்த பலனை பெற முடியும்.