குழந்தைகளுக்கு வீட்டில் ஏற்படும் விபத்துகளை தவிர்த்தல்

குழந்தைகளுக்கு வீட்டில் ஏற்படும் விபத்துகளை தவிர்த்தல்
தண்ணீரில் பாதுகாப்பு 

குளியல் தொட்டி நீச்சல் குளம் ஆகியவற்றில் தண்ணீரில் குதித்து விளையாடுவதை குழந்தைகள் அதிகம் விரும்புவார்கள் .

குதூகலமாக இருந்தாலும் அதில் ஆபத்தும் இருக்கிறது என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

 குழந்தைகளின் இடுப்பு அளவுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

 அதிக அளவு தண்ணீரில் அவர்களை விளையாட அனுமதிக்க கூடாது.

 தண்ணீருக்கு அருகில் இருக்கும் போது பெரியவர்களின் கவனம் முழுவதும் குழந்தைகளின் மீது மட்டுமே இருக்க வேண்டும்.

 அந்த நேரத்தில் கைபேசியில் பேசுபவை தவிர்க்க வேண்டும்.

மின் சுவிட்சுகளை மூடுதல்

வீட்டில் அதிகம் பயன்படுத்தாத மின் சாக்கெட்டுகளை மூடி வைப்பது நல்லது.

 சார்ஜர்களை உபயோகப்படுத்திய பின் அதன் சூழ்ச்சிகளை அணைத்து வைப்பது, வயர்களை விளக்கிலிருந்து அகற்றுவதும் முக்கியமானவை.

 பழுதடைந்த மின் சாதனங்களை உடனடியாக மாற்றுவதும், அவற்றை குழந்தைகள் கையில் எட்டாத வகையில் வைப்பதும் அவசியம்.

 சுவிட்சுகளை மூடுவதற்கு தற்போது உரைகள் கிடைக்கின்றன.

 அவற்றை கொண்டு பாதுகாப்பாக முடி வைப்பது நல்லது.

 சிறிய பொருட்களில் கவனம் 

சிறு குழந்தைகள் கையில் கிடைப்பது எல்லாம் வாயில் போட்டுக் கொள்வார்கள்.

 சிறு சிறு பொம்மைகள், நாணயங்கள், சட்டை பட்டன்கள் ஆகியவற்றை எளிதில் பிடுங்கி விடுவார்கள்.

 குழந்தைகளுக்கு வழங்கும் உணவிலும் கவனமாக இருக்க வேண்டும்

 திட்ட உணவுகளை எளிதில் கடித்து சாப்பிடும் வகையில் கொடுக்க வேண்டும்.

 மிட்டாய்கள், கேரட், உலர் பழங்கள், பாப்கான் ஆகியவற்றை குழந்தைக்கு கொடுக்கும்போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் .

இதை தொண்டையில் சிக்கிக் கொண்டால் மூச்சு திணறலை உண்டாக்கும் .

கீழே விழுவதை தடுத்தல்

குழந்தை பருவத்தில் ஏற்படும் காயங்களில் 44% குழந்தைகள் கீழே விழுவதால் உண்டாகிறது.

 மேஜை படுக்கை அல்லது சோபாவின் மேலிருந்து உருளுவது படிக்கட்டுகளில் இருந்து வேகமாக இறங்குவது ஜன்னல் மற்றும் பால்கனியில் இருந்து குதிப்பது போன்ற செயல்களில் சிறு குழந்தைகள் ஈடுபடலாம்.

 இதை தவிர்க்க ஜன்னல் மற்றும் பால்கனிகளுக்கு அருகில் நாற்காலி மேசை போன்றவற்றை வைத்திருப்பதை தவிர்க்கவும்.

 மேல் மாடிக்கு செல்லும் கதவுகள் மற்றும் அறைகளின் ஜன்னல்களை குறிப்பிட்ட அளவுக்கு மேல் திறக்க முடியாதபடி செய்ய வேண்டும்.

 ஆபத்தில் செயல்படுதல் 

வளர்ப்பு பிராணிகளிடம் பாதுகாப்பாக விளையாடுவது எப்படி என்பதை கற்றுத் தர வேண்டும்.
 வீட்டில் ஆபத்துக் காலத்தில் எவ்வாறு செயல்படுவது முதலுதவி பெட்டியில் உள்ள பொருட்களை கையாளும் முறை வீட்டின் முகவரி பக்கத்து வீட்டில் உள்ளவர்களின் தொடர்பு எண்கள் அவசர காலத்தில் அளிக்க வேண்டிய முக்கிய எண்கள் என அனைத்தையும் குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும்.


கருத்துரையிடுக

புதியது பழையவை