ரத்தத்தை சுத்தமாக எளிய ஏழு வழிகள்
ரத்தம், சக்தி மிகு திரவமாக இருக்க முருங்கைக்கீரை, மணத்தக்காளி கீரை, பொன்னாங்கண்ணி கீரை, வாழைப்பூ, நாவல் பழம் , உலர்ந்த திராட்சை, முளைகட்டிய தானியங்கள் ஆகியவை அடிக்கடி உணவில் சேர்த்து வர ரத்தம் சுத்தம் ஆவதோடு அதிகரிக்கவும் செய்யும் .
புளிச்சக்கீரை துவையலாக செய்து சாப்பிட்டு வர ரத்தத்தை சுத்தப்படுத்தி அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்.
இஞ்சியை நன்றாக இடித்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வர ரத்தத்தை சுத்தமாக்குவதுடன் ரத்த அணுக்களையும் அதிகரிக்கும் .
எலந்த பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
தினமும் உணவில் பூண்டு சேர்த்து வர ரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன் பூண்டு ரத்த ஓட்டத்தை சீராக்கி உடலுக்கு புத்துணர்வை கொடுக்கிறது.
மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. மேலும் இதில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இதனை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம் ரத்தம் உறைவது தடுக்கப்படுவதோடு உடலில் ரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்படும் .மேலும் மஞ்சள் ரத்தத்தை மட்டும் இன்றி ஒட்டுமொத்த உடலையும் சுத்தமாக்கும்.
கடுக்காய் பொடி ஐந்து கிராம், கிராம்பு பொடி 4 கிராம் இரண்டையும் சேர்த்து 100 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி சிறிதளவு நெய் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் கொடுக்க இரண்டு மூன்று தடவை பேதியாகும் இதுபோல் வாரம் ஒரு முறை அல்லது அவ்வப்போது செய்து வர ரத்தத்தை தூய்மையாக்கலாம்.