கர்ப்ப காலத்தில் சரும பராமரிப்பு

கர்ப்ப காலத்தில் சரும பராமரிப்பு
திருமணமான பெண்கள் கொஞ்சம் மகிழ்வுடன் வெளியேறி காணப்பட்டால் என்ன விசேஷமா? என பலரும் கேட்பது வழக்கம்.

 கர்ப்பமான பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஜொலிக்கும் சருமம் சிலருக்கு வந்துவிடும்.

 ஆனால் சிலருக்கோ அப்படி ஏற்படுவதில்லை.

 முகப்பரு, சர்மா வறட்சி, வெடிப்புகள், தடிப்புகள், வீக்கம் மற்றும் கருமையான தட்டுகள் போன்ற பல பிரச்சனைகள் இந்த சமயத்தில் வரலாம்.

 இப்படி ஏற்படும் சரும பிரச்சனைகள் பெரும்பாலும் குழந்தை பிறப்பிற்கு பிறகு தானாகவே சரியாகிவிடும்.

 இருந்தாலும் கர்ப்ப காலத்தை எதிர்நோக்கும் பெண்கள் சில சரும பராமரிப்பு விஷயங்களில் கவனம் செலுத்தலாம்.

 இதனால் மிளிரும் தோற்றத்தை எளிதில் பெற முடியும்.

 அந்த சமயத்தில் சருமத்தில் உண்டாகும் பிரச்சனைகள் என்ன என்ன என்பதை அறிந்து கொண்டால் அதற்கு தீர்வு காண்பது எளிதாக இருக்கும்.

 உதாரணமாக செபாசியஸ் சுரப்பியின் அதிகமான சுரப்பால் முகப்பரு உண்டாகலாம் .

மேலும் கர்ப்ப காலத்தில் முகப்பரு பொதுவானது.

 ஹார்மோன் மாற்றம் மட்டுமில்லாமல் உடல் சூடு அதிகரித்தாலும் முகப்பரு வரும்.

 அதனால் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.

 அந்த பருவத்தில் கிடைக்கும் நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கனிகளை உண்ணலாம்.

 இந்த சமயத்தில் முகப்பருவை தடுக்க கிரீம்கள் உபயோகப்படுத்துவதை தவிர்க்கவே மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.

 காரணம் சந்தையில் கிடைக்கும் 95% சரும பராமரிப்பு மற்றும் அழகு சாதன பொருட்கள் அனைத்திலும் உடலுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய வேதிய பொருட்கள் உள்ளன அதனால் அவற்றை தவிர்த்து மூலிகைகள், பழங்கள், காய்கறிகள் என்பவற்றை பயன்படுத்தி பேசியல் செய்யலாம்.

 பப்பாளி மாம்பழம் போன்ற பழங்களை குல்போல் செய்து முகத்தில் மசாஜ் செய்யலாம் முகத்தில் மேலிருந்து கீழ்நோக்கி ஐந்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

 முகப்பொலிவு பெறும் கர்ப்ப காலத்தில் சிலருக்கு அதிகப்படியான முடி உதிர்வு இருக்கும்.

 அதனால் குழந்தை வளர்ச்சிக்காக கொடுக்கப்படுகிற கால்சியம் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் மாத்திரைகளை தொடர்ந்து எடுத்து வந்தால் இந்த முடி கொட்டுவது குறையும்.

 இந்த சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்யலாம்.

 கர்ப்ப காலத்தில் வயிற்று தசைகளும் மார்பகங்களும் விரிவடைவது சகஜமானது.

 மேலும் வயிற்றுப் பகுதியில் அரிப்பு ஏற்பட்டு கட்டுப்படுத்த முடியாமல் சாெரிய நேரிடும்.

 இதற்கு மாதுளை தோல் பொடியையும், பசு நெய்யையும் கலந்து மூன்றாவது மாதத்தில் இருந்தே வயிற்றிலும், மார்பகத்திலும் பூசவும் .

அரிக்கும் இடத்தில் வேப்பிலை அல்லது வெளிதான துணியால் தடவி கொடுங்கள்.

 இப்படி செய்வதன் மூலம் பிரசவத்துக்கு பிறகு தழும்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.

 மேலும் ஆலிவ், தேங்காய் எண்ணெயை வயிற்றில் தடவலாம்.

 வளைகாப்பு விழாவின் போது சில பெண்கள் கெமிக்கல் கலந்த மேக்கப் போட்டுக் கொள்கின்றனர்.
 கர்ப்ப காலத்தில் தோல் அலர்ஜி ஏற்படுபவர்கள் முடிந்தவரை மேக்கப் போடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

கருத்துரையிடுக

புதியது பழையவை