பெண்களுக்கு முகத்தில் முடியா?
முகத்தில் வளரும் முடிகளை எளிதாக அகற்றலாம்
முகப்பரு, தலைமுடி உதிர்வு போன்ற பிரச்சனைகளுக்கு அடுத்து பெண்கள் அதிகமாக கவலைப்படுவது முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நினைத்துதான்.
இதற்கு காரணம் மற்றும் முடிகளை நீக்குவதற்கு இயற்கையான வழிகள் பற்றி தெரிந்து கொள்வோம்:
ஹார்மோன்கள் அன்றாட வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக ஹார்மோன்கள் சீரற்ற சுரக்கும்.
இதனால் ஆன்ட்ரோஜன் எனும் ஆண்களுக்கான ஹார்மோன் சுரப்பு பெண்கள் உடலில் அதிகரிக்கும்.
இது முகத்தில் தேவையற்ற முடி வளர்ச்சி, குறள் கரகரப்பாக மாறுதல், எடை அதிகரித்தல், கருப்பை நீர்க்கட்டிகள் , தைராய்டு பாதிப்பு போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
மரபியல் ஆரோக்கியமான பெண்களுக்கு முகத்தில் முடிகள் அதிகமாக வளர்வதற்கு மரபு வழியும் காரணமாக இருக்கலாம்.
பாட்டி, அம்மா அல்லது பரம்பரையில் உள்ள பிற பெண்களுக்கு முகத்தில் முடி அதிகமாக இருந்தால் அடுத்த தலைமுறைக்கும் இவ்வாறு ஏற்பட வாய்ப்பு உண்டு.
தவிர்க்க வேண்டியவை
சேவிங்
முகத்தில் வளரும் முடிகளை நீக்குவதற்காக பிளக்கிங் வேக்சிங் சேவிங் போன்ற பல முறைகளை பெண்கள் கையாளுகின்றனர் .
இதை உடனடி தீர்வாக இருந்தாலும் இவற்றால் சருமம் சேதம் அடைவது கடினமாவது போன்ற பாதிப்புகள் உண்டாகும் .
ஆகையால் முடிந்தவரை இவற்றை தவிர்ப்பது நல்லது.
செயற்கை கிரிம்
முடிகளை நீக்க கடைகளில் கிடைக்கும் செயற்கை கிரிம்களை பயன்படுத்துவதால் அதில் உள்ள ரசாயனம் முகத்தில் அரிப்பு தோல் தடிப்பு பருக்கள் அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளை உருவாக்கும்.
மேற்கொள்ள வேண்டிய இயற்கை வழிகள்
சிறிதளவு சர்க்கரை உடன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் தண்ணீர் கலந்து பசை போல தயாரிக்கவும்.
இந்தக் கலவையை முகத்தில் முடி வளர்ச்சி இருக்கும் இடங்களில் தடவி ஐந்து நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும் .
பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவும் இவ்வாறு வாரம் இரு முறை செய்து வந்தால் முகத்தில் வளர்ந்திருக்கும் தேவையற்ற முடிகள் எளிதில் நீங்கும் .
மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன், சிறிதளவு முத்து எலுமிச்சை பழச்சாறு மற்றும் பால் ஆகியவற்றை நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும்.
இதை முடி வளர்ச்சிக்கு எதிர்ப்புறமாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும் இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் முகம் பளபளப்பு ஆவதுடன் முடிகளும் உதிர்ந்து விடும்.
ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, மஞ்சள் தூள், சிறிதளவு கடுகு, எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பசை போல தயாரிக்கவும்.
இதனால் முடி உதிர்வதுடன் வளர்ச்சியும் கட்டுக்கள் வரும்