பப்பாளி விதையின் பயன்கள்
பப்பாளியின் காய் மற்றும் பழத்தைப் போலவே அதன் விதைகளும் ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டவை.
இதில் பாலிபீனால், பிளேவனாய்டுகள், ஆன்டிஆக்சிடன்டுகள் போன்ற மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் அதிகம் உள்ளன.
பப்பாளி விதை பொடியை தினமும் காலையில் எழுந்ததும் உணவு உண்பதற்கு முன்பு தண்ணீரில் கலந்து குடிக்கலாம் அல்லது ஒரு தேக்கரண்டி பப்பாளி விதைகளை அப்படியே மென்று சாப்பிடலாம்.
இதனால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இங்கே பார்ப்போம்:
கொழுப்பை குறைக்கும்
பப்பாளி விதையில் இருக்கும் ஒலியிக் அமிலம் மற்றும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும்.
இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கி நச்சுக்களை வெளியேற்றும்.
இதனால் உடல் எடை குறையும்.
இரத்த அழுத்தம் சீராகி இதயம் பலம் பெறும்.
மாதவிலக்கு சீராக்கும்
பப்பாளி விதைகளில் உள்ள கராேட்டின், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தி ஏசி இருக்கும் .
இதனால் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி குறையும்.
சர்ம பராமரிப்பு
பப்பாளி விதையில் உள்ள சத்துக்கள் சருமத்தின் ஈரப்பதம் மற்றும் நெகிழ்வு தன்மையை அதிகரித்து வயது முதிர்ச்சியால் ஏற்படும் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் உருவாகாமல் தடுக்கும் .
பொடுகை போக்கும்
உலர்ந்த பப்பாளி விதைகளை பொடி செய்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் தடவவும் .
அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும்.
வாரத்தில் இரண்டு முறை இவ்வாறு செய்தால் முடி அடர்த்தியாகும்.
பப்பாளி விதைகளில் உள்ள ஒலியிக் அமிலம் தலையில் பொடுகு வராமல் தடுக்கும்.
நோய் தொற்றை தடுக்கும்
பப்பாளி விதையில் உள்ள மூலக்கூறுகள் பூஞ்சை பாரசைட்டுகள் மற்றும் ஈஸ்ட் போன்ற நுண் கிருமிகளுக்கு எதிராக செயல்பட்டு நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கும்.
எச்சரிக்கை
பப்பாளி விதைகளை தினமும் ஒரு தேக்கரண்டி அளவு குறிப்பிட்ட காலம் மட்டுமே சாப்பிட வேண்டும்.
அதிகமாக உட்கொள்வதால் மலட்டுத்தன்மை ஏற்படும் .
கர்ப்பிணி பெண்கள் பப்பாளி விதைகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள், மூட்டு வலி உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சாப்பிடுவது சிறந்தது.