சிசேரியன்கள் நடப்பது எதனால்

சிசேரியன்கள் நடப்பது எதனால்
குழந்தை இயல்பாக பிறக்கும் வாய்ப்பே 80 சதவீதம் பெண்களுக்கு இருக்கிறது.

 ஆரோக்கியம் ஆகியவை இவற்றில் முக்கிய பங்காற்றும்.

குழந்தை 2.5 கிலோ எடைக்கு மேல் இருந்தால் இயல்பான பிரசவத்திற்கு கேரண்டி இருக்கும் .

அதிகபட்சம் 4.5 கிலோ எடை கொண்ட குழந்தை கூட இயற்கை பிரசவத்தில் வெளியே வந்துள்ளது.

 வளர்ச்சி குறைந்த குழந்தைகளால் பிரசவ நிகழ்வை எதிர் கொண்டு வெளிவர முடியாத நிலை இருப்பதும் சிசேரியன்களுக்கான காரணங்களில் ஒன்று.

 குழந்தையின் வெளிவரும் நிலை என்பது பாட்டில் மூடியை நோக்கி உருண்டு வரும் கோலி சோடாவை போன்றது .

குழந்தையின் தலை தானாகவே உருண்டு வெளிப்பகுதியை நோக்கி வரவேண்டும்.

 அதற்கு தாயின் வயிற்றுக்குள் இருக்கும் பனிக்குட நீர் உதவும்.

 குழந்தையும் தலை வெளி வாசல் நோக்கி வராமல் தோள்பட்டையோ கைப்பகுதியோ வந்து நின்றால் தாய்க்கு வலி அதிகரிக்கும் .

இயற்கை பிரசவத்துக்கு வாய்ப்பு குறையும் .

குழந்தையின் இதயத்துடிப்பு பிரசவ நேரத்தில் இயல்பை விட இரட்டிப்பாகவே இருக்கும்.

 பொதுவாக பாப்பாவின் பல்ஸ் 110 முதல் 180 வரை கூட செல்லும் .

இதைத் தாண்டினாலோ அல்லது துடிப்பற்று இருந்தால் மருத்துவர் குழு விரைந்து செயல்பட வேண்டி இருக்கும்.

 முதல் குழந்தையை சிசேரியனில் பெற்றெடுத்த தாய்க்கு இரண்டாவது குழந்தை நார்மல் டெலிவரி ஆக வாய்ப்புகள் இருக்கின்றன.
 எனவே இரண்டாவது குழந்தையும் சிசேரியன் ஆகுமோ என்று அஞ்ச வேண்டாம்.

1 கருத்துகள்

புதியது பழையவை